Хвала - моление дождю

வான்நின்று உலகம் வழங்கி வருதலால்
தான்அமிழ்தம் என்றுணரற் பாற்று.   (௰௧ - 11)
 

Мир жизнью обязан изначально дождю Вот почему дождь -следует называть нектаром жизни

துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்
துப்பாய தூஉம் மழை.   (௰௨ - 12)
 

Дождь все взращивает для поддержании жизни и сам служит для утоления жажды

விண்இன்று பொய்ப்பின் விரிநீர் வியனுலகத்து
உள்நின்று உடற்றும் பசி.   (௰௩ - 13)
 

Если бы иссяк дождь, то разразился бы такой голод, который стал бы терзать громадный мир, окруженный океаном

ஏரின் உழாஅர் உழவர் புயல்என்னும்
வாரி வளங்குன்றிக் கால்.   (௰௪ - 14)
 

Если скрытый в облаках источник богатств иссякнет,,о и земледелец отвернется от сохи

கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய்மற் றாங்கே
எடுப்பதூஉம் எல்லாம் மழை.   (௰௫ - 15)
 

Дождь разрушает, но вслед за разрушением своим падением помогает пострадавшему земледельцу возродить разрушенное

விசும்பின் துளிவீழின் அல்லால்மற் றாங்கே
பசும்புல் தலைகாண்பு அரிது.   (௰௬ - 16)
 

Если ни одна капля не слетит с небес, то и ни одна былинка не проклюнется из земли

நெடுங்கடலும் தன்நீர்மை குன்றும் தடிந்தெழிலி
தான்நல்கா தாகி விடின்.   (௰௭ - 17)
 

Оскудеют даже сокровища обширного океана, если тучи,,питывающие его влагу, снова не прольют ее над ним*

சிறப்பொடு பூசனை செல்லாது வானம்
வறக்குமேல் வானோர்க்கும் ஈண்டு.   (௰௮ - 18)
 

Если иссякнет дождь, то на земле исчезнут празднества и жертвоприношения богам

தானம் தவம்இரண்டும் தங்கா வியன்உலகம்
வானம் வழங்கா தெனின்.   (௰௯ - 19)
 

Не будет дождя — и огромный мир не вспомнит о подаянии и добродетели

நீர்இன்று அமையாது உலகெனின் யார்யார்க்கும்
வான்இன்று அமையாது ஒழுக்கு.   (௨௰ - 20)
 

Без дождя погибли бы живые создания; без влаги никто не смог бы следовать стезей добродетели

பு. ஆ. முத்துக்கிருஷ்ணன் (திருக்குறள் இசைமலர்)

Raga: மகாநந்தி  |  Tala: ஆதி
பல்லவி:
வான முகிலே வருக-உயர்
வான முகிலே வருக
வள்ளுவர் உள்ளங் கண்ட
மாமழை நீ வருக

அநுபல்லவி:
தானம் தவமிரண்டும்
தங்கிடவே உலகில்
வானகம் நீ வழங்கும்
வண்மையைப் போற்றிடுவோம்

சரணம்:
"நீரின்றி அமையாது உலகெனின் யார் யார்க்கும்
வானின் றமையாது ஒழுக்கம்" என்பதை ஏற்கும்
ஏரின் உழவு முதல் எத்தொழிற்கும் உதவி
பாரின் பசியகற்றும் பைம்புனலே வணக்கம்




Popular Chapter

Popular Couplet

Repeated Word in Couplets
Most repeated word in Thirukkural
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

Repeated Word in Couplet Starting
Most common First word in the Couplets
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

Repeated Word in Couplet Ending
Most common Last word in the Couplets
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22