Raga: கல்யாணி | Tala: ஆதி பல்லவி:அணங்கு கொல் ஆய்மயில் கொல்லோ
கனங்குழை மாதர் கொல்
மாலும் என் நெஞ்சு காணும் எழில் கொஞ்சும்
அநுபல்லவி:மணங்கமழ் சோலையில் ஆடவந்தாளோ
மான் தேடுகின்றாளோ நான் காண நின்றாளோ
சரணம்:கூற்றமோ கண்ணோ பிணையோ மடவரல்
நோக்கம் இம்மூன்றும் உடைத்தெனும் திருக்குறள்
ஏற்ற கொடும்புருவம் கோடா மறைப்பின்
என்னை வருத்தும் துன்பம் இல்லையென்றே உரைப்பன்
நண்ணாரும் போர்க்களத்தில் எனைக்கண்டால் அஞ்சும் வீரம்
ஒண்ணுதற்கோ உடைந்த விந்தையைக் கேளும்
உண்டாரையே மயக்கும் கள்ளல்ல இவள் காமம்
கண்டாலும் இன்பம் தரும் காவியத் தேனூறும்