Как вести себя в собрании

அவையறிநது ஆராய்ந்து சொல்லுக சொல்லின்
தொகையறிந்த தூய்மை யவர்.   (௭௱௰௧ - 711)
 

Мудрые люди, обладающие красноречием, произносят речь с большим уважением к слушателям

இடைதெரிந்து நன்குணர்ந்து சொல்லுக சொல்லின்
நடைதெரிந்த நன்மை யவர்.   (௭௱௰௨ - 712)
 

Умудренные опытом ораторы должны выбирать удобное время и изучить аудиторию и лишь потом держать речь

அவையறியார் சொல்லல்மேற் கொள்பவர் சொல்லின்
வகையறியார் வல்லதூஉம் இல்.   (௭௱௰௩ - 713)
 

Познай слушателей, а затем лишь решайся произносить речь. Так поступают люди, владеющие словом

ஒளியார்முன் ஒள்ளிய ராதல் வெளியார்முன்
வான்சுதை வண்ணம் கொளல்.   (௭௱௰௪ - 714)
 

Пусть мудрый держит речь перед мудрыми, а перед обладающими заурядным умом пусть выскажет простоту, подобную белизне извести

நன்றென்ற வற்றுள்ளும் நன்றே முதுவருள்
முந்து கிளவாச் செறிவு.   (௭௱௰௫ - 715)
 

Будь скромным и не спеши держать речь в собрании мудрых старцев. Так ты выкажешь свое достоинство

ஆற்றின் நிலைதளர்ந் தற்றே வியன்புலம்
ஏற்றுணர்வார் முன்னர் இழுக்கு.   (௭௱௰௬ - 716)
 

Произносить слово в неурочный час перед мудрыми – все равно, что поскользнуться или забыть справедливость

கற்றறிந்தார் கல்வி விளங்கும் கசடறச்
சொல்தெரிதல் வல்லார் அகத்து.   (௭௱௰௭ - 717)
 

Мудрость знающих людей подобна свету в собрании многоопытных

உணர்வ துடையார்முன் சொல்லல் வளர்வதன்
பாத்தியுள் நீர்சொரிந் தற்று.   (௭௱௰௮ - 718)
 

Выступать перед мудрыми — то же, что давать влагу полям с зазеленевшими всходами

புல்லவையுள் பொச்சாந்தும் சொல்லற்க நல்லவையுள்
நன்குசலச் சொல்லு வார்.   (௭௱௰௯ - 719)
 

Пусть мудрые держат речь перед мудрыми, но не открывают уста перед глупцами даже в забывчивости

அங்கணத்துள் உக்க அமிழ்தற்றால் தங்கணத்தார்
அல்லார்முன் கோட்டி கொளல்.   (௭௱௨௰ - 720)
 

Держать речь перед глупцами — то же, что сливать нектар жизни в сточную канаву

பு. ஆ. முத்துக்கிருஷ்ணன் (திருக்குறள் இசைமலர்)

Raga: காப்பி  |  Tala: ரூபகம்
பல்லவி:
அவையறிந்து பேச வேண்டுமே - நண்பா
அவையறிந்து பேச வேண்டுமே

அநுபல்லவி:
"அவையறிந்து ஆராய்ந்து சொல்லுக சொல்லின்
தொகையறிந்த தூய்மையவர்" எனும் திருக்குறளின்

சரணம்:
கல்லார்முன் கல்லாராய்க் காணவும் வேண்டும்
கற்றவர்முன் கற்றவராய் விளங்கவும் வேண்டும்
புல்லவையுள் பொச்சாந்தும் சொல்லற்க சொல்லை
நல்லவையுள் நன்கு செலச் சொல்லுவார் எல்லை

பயிர் வளரும் பாத்தியிலே நீர் சொரிந்தாற் போலவும்
பயனுணரும் படித்தவர்முன் பேசவேண்டும் சாலவும்
உயிர் வளர்க்கும் பாலமுதைச் சேற்றில் ஊற்றலாகுமா?
உரிய இனமல்லார்முன் பேசிப் பயன் காணுமா?




Popular Chapter

Popular Couplet

Repeated Word in Couplets
Most repeated word in Thirukkural
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

Repeated Word in Couplet Starting
Most common First word in the Couplets
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

Repeated Word in Couplet Ending
Most common Last word in the Couplets
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22