లోపగ

நிழல்நீரும் இன்னாத இன்னா தமர்நீரும்
இன்னாவாம் இன்னா செயின்.   (881)

నీడ, నీళ్ళ గుణము వాడంగ దెలియును
ముందు దెలియదట్లె బంధు పగయు.

வாள்போல பகைவரை அஞ்சற்க அஞ்சுக
கேள்போல் பகைவர் தொடர்பு.   (882)

కత్తినెత్తు పగకు నొత్తిలఁ బనిలేదు
భయపడంగ వలయు బంధు పగకు

உட்பகை அஞ்சித்தற் காக்க உலைவிடத்து
மட்பகையின் மாணத் தெறும்.   (883)

ఐనవారి వైరమగుపించకనె చంపు
కుమ్మరి చెయినుండు కూసు విధము.

மனமாணா உட்பகை தோன்றின் இனமாணா
ஏதம் பலவும் தரும்.   (884)

అంతరంగ కలహ మారంభమైనచో
చుట్టరికమె నిన్నుఁ బట్టియిచ్చు.

உறல்முறையான் உட்பகை தோன்றின் இறல்முறையான்
ஏதம் பலவும் தரும்.   (885)

చూడ చుట్టమయ్యు కీడెంచువాఁడున్న
వాని వలన వచ్చు ప్రాణహాని.

ஒன்றாமை ஒன்றியார் கட்படின் எஞ்ஞான்றும்
பொன்றாமை ஒன்றல் அரிது.   (886)

ఐక్యపడిన వారికైనచో కలహమ్ము
తప్పుకొనఁగలేము ముప్పురాక.

செப்பின் புணர்ச்சிபோல் கூடினும் கூடாதே
உட்பகை உற்ற குடி.   (887)

కలిసినట్లె యుండు కలశమ్మువైమూత
ఇంటి పగయునట్లె యిమిడియుండు.

அரம்பொருத பொன்போலத் தேயும் உரம்பொருது
உட்பகை உற்ற குடி.   (888)

ఆకురాయి యినుము నరగదీనెడి మాడ్కి
పాడుబడును గృహము బంధుపగళు.

எட்பக வன்ன சிறுமைத்தே ஆயினும்
உட்பகை உள்ளதாங் கேடு.   (889)

అంతరంగ కలహ మణు మాత్రమున్నను
దాని ముప్పు గొప్పగాను తోచు.

உடம்பாடு இலாதவர் வாழ்க்கை குடங்கருள்
பாம்போடு உடனுறைந் தற்று.   (890)

సర్పమున్న యింటఁ సంసారమున్నట్లు
సమరసమ్ము లేక సాగు బ్రతుకు.