కోపము

செல்லிடத்துக் காப்பான் சினங்காப்பான் அல்லிடத்துக்
காக்கின்என் காவாக்கா லென்.   (௩௱௧ - 301)
 

చెల్లు నెడలనైన చెల్లంపకుండుటే
కోపమణఁచుకొన్న గుణమనంగ (౩౦౧)

செல்லா இடத்துச் சினந்தீது செல்லிடத்தும்
இல்அதனின் தீய பிற.   (௩௱௨ - 302)
 

అనువు గానిచోట నాగ్రహించుట చెఱు
పంత కన్న నేర మనువు చోట. (౩౦౨)

மறத்தல் வெகுளியை யார்மாட்டும் தீய
பிறத்தல் அதனான் வரும்.   (௩௱௩ - 303)
 

కోప మెవరి యందుఁ జూపుట సరిగాదు
కష్టములకు నదియె కారణమ్ము. (౩౦౩)

நகையும் உவகையும் கொல்லும் சினத்தின்
பகையும் உளவோ பிற.   (௩௱௪ - 304)
 

మనను కుములఁ జేయ మందహాసముఁ దీయ
ఆగ్రహంబె శత్రువగు నిజంబు. (౩౦౪)

தன்னைத்தான் காக்கின் சினங்காக்க காவாக்கால்
தன்னையே கொல்லுஞ் சினம்.   (௩௱௫ - 305)
 

కోరనేల రక్ష కోపముడిగెనేని
కోరనెల్ల శిక్ష కోపమున్న. (౩౦౫)

சினமென்னும் சேர்ந்தாரைக் கொல்லி இனமென்னும்
ஏமப் புணையைச் சுடும்.   (௩௱௬ - 306)
 

ఆగ్రహంబు కాల్చు నైనవారిని దన్ను
అంటకొన్న వరకె మంట కాల్చు. (౩౦౬)

சினத்தைப் பொருளென்று கொண்டவன் கேடு
நிலத்தறைந்தான் கைபிழையா தற்று.   (௩௱௭ - 307)
 

ఆగ్రహమున కార్య మగునని దలచుట
బండను తనచేత బాదినల్లు. (౩౦౭)

இணர்எரி தோய்வன்ன இன்னா செயினும்
புணரின் வெகுளாமை நன்று.   (௩௱௮ - 308)
 

నిప్పు బెట్టినట్లు నొప్పించు చుండిన
నాగ్రహింప వలవ దట్టి యెడను. (౩౦౮)

உள்ளிய தெல்லாம் உடனெய்தும் உள்ளத்தால்
உள்ளான் வெகுளி எனின்.   (௩௱௯ - 309)
 

లేశమైన మదిని లేకున్న కోపమ్ము
సకల మతని కడకు సాగివచ్చు. (౩౦౯)

இறந்தார் இறந்தார் அனையர் சினத்தைத்
துறந்தார் துறந்தார் துணை.   (௩௱௰ - 310)
 

కోపగాడు మృత్యు కూపంబులోబడు
శాంతపరుఁడు మోక్ష సౌధ మెక్కు. (౩౧౦)

பு. ஆ. முத்துக்கிருஷ்ணன் (திருக்குறள் இசைமலர்)

Raga: சுபபந்துவராளி  |  Tala: ஆதி
பல்லவி:
சினமே தவிர் செம்மையாகும் வாழ்வு
சீலமே பெற தருமே நலமே

அநுபல்லவி:
மனமோ மலர் சினமோ செந்தீயாம்
மலரைத் தீய்க்கலாமோ
மணமதில் உண்டாமோ

சரணம்:
சேர்ந்த பேரைக் கொல்லும் தேர்ந்த நட்பகற்றும்
சிரிப்பும் மகிழ்வும் சேராமல் நீக்கும்
சார்ந்தவர் குடியும் குலமும் கெடுக்கும்
தன்னைக் காக்கவேண்டின் சினம்காக்க நாளும்

"இறந்தார் இறந்தார் அனையர் சினத்தைத்
துறந்தார் துறந்தார் துணை" என்பதால்
அறந்தாங்கவே ஆற்றும் குறள் சொல்
அறிந்தே தெளிந்தால் அருள்மேவும் வாழ்வில்




Popular Chapter

Popular Couplet

Repeated Word in Couplets
Most repeated word in Thirukkural
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

Repeated Word in Couplet Starting
Most common First word in the Couplets
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

Repeated Word in Couplet Ending
Most common Last word in the Couplets
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22