మఱపు

இறந்த வெகுளியின் தீதே சிறந்த
உவகை மகிழ்ச்சியிற் சோர்வு.   (531)

ఆగ్రహంబు కన్న నధికమౌ నేరమ్ము
సంతనమున మఱపు సంభవింప

பொச்சாப்புக் கொல்லும் புகழை அறிவினை
நிச்ச நிரப்புக்கொன் றாங்கு.   (532)

మందగించు బుద్ధి మనుజండు వేదైన
మఱపు జేత కీర్తి మందగించు.

பொச்சாப்பார்க் கில்லை புகழ்மை அதுஉலகத்து
எப்பால்நூ லோர்க்கும் துணிவு.   (533)

మాసిపోవు కీర్తి మఱపున్న వారికి
శాస్త్ర ధనులకైన సత్యమిద్ది.

அச்ச முடையார்க்கு அரணில்லை ஆங்கில்லை
பொச்சாப் புடையார்க்கு நன்கு.   (534)

భద్రమగునె కోట భయమున్న వానికి
మఱచు వాని కెట్లు మంచి గలుగు.

முன்னுறக் காவாது இழுக்கியான் தன்பிழை
பின்னூறு இரங்கி விடும்.   (535)

ఎచ్చు వెతల దెలసి వారింప మఱచిన
చిక్కులందు జిక్కి చింతఁ జెందు.

இழுக்காமை யார்மாட்டும் என்றும் வழுக்காமை
வாயின் அதுவொப்பது இல்.   (536)

ఎంత కార్యమున్న నేకొలమునగాని
మఱపులేని వాని మహిమె మహిమ.

அரியஎன்று ஆகாத இல்லைபொச் சாவாக்
கருவியால் போற்றிச் செயின்.   (537)

జ్ఞాపకమను గొప్ప సాధన సంపత్తి
కలుగువాని కేది కాదు జగతి.

புகழ்ந்தவை போற்றிச் செயல்வேண்டும் செய்யாது
இகழ்ந்தார்க்கு எழுமையும் இல்.   (538)

మెప్పు నిచ్చు పనుల నుప్పొంగి జేయక
మఱచువాని కెపుడు మంచి రాదు.

இகழ்ச்சியின் கெட்டாரை உள்ளுக தாந்தம்
மகிழ்ச்சியின் மைந்துறும் போழ்து.   (539)

సాగుచున్న నాఁడు జదువుము, మఱపుచే
కష్ట పడిన వారి గాథ లెల్ల.

உள்ளியது எய்தல் எளிதுமன் மற்றுந்தான்
உள்ளியது உள்ளப் பெறின்.   (540)

వలసి నట్టిదాని వదలక జింతింప
వలసినట్టు లదియె వచ్చి చేరు.