అణకువ

அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை
ஆரிருள் உய்த்து விடும்.   (121)

అమరులందు జేర్చు నణకువ యొక్కుని
నడుసు నందు దొక్కు మిడిసిపాటు

காக்க பொருளா அடக்கத்தை ஆக்கம்
அதனினூஉங் கில்லை உயிர்க்கு.   (122)

ఊసిరున్న దనుకఁగా పాడు మణకువనే
కలిమికన్న దాని ఫునత హెచ్చు.

செறிவறிந்து சீர்மை பயக்கும் அறிவறிந்து
ஆற்றின் அடங்கப் பெறின்.   (123)

విద్య వినయమంచు విభుదుండు భావించి
మెలఁగుచుండు బ్రతుకు మెరుగు పడఁగ

நிலையின் திரியாது அடங்கியான் தோற்றம்
மலையினும் மாணப் பெரிது.   (124)

ఊన్న ధర్మమునకు భిన్నత గానట్టి
నిగ్రహ పరుఁజూడ వింగి వంగు

எல்லார்க்கும் நன்றாம் பணிதல் அவருள்ளும்
செல்வர்க்கே செல்வம் தகைத்து.   (125)

అందఱికిని మంచి యణకువగా నున్న
నున్న వారి కధిక వన్నెఁదెచ్చు

ஒருமையுள் ஆமைபோல் ஐந்தடக்கல் ஆற்றின்
எழுநம்யும் ஏமாப் புடைத்து.   (126)

కూర్మ మట్టులణచు కొమవాని కీ జన్మ
కేడు జన్మములకు తోడు సుఖము

யாகாவா ராயினும் நாகாக்க காவாக்கால்
சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு.   (127)

వదలరాదు నాల్క వదలిన సర్వమ్ము
మాటఁజార భంగపాటు వచ్చు

ஒன்றானுந் தீச்சொல் பொருட்பயன் உண்டாயின்
நன்றாகா தாகி விடும்.   (128)

మంచి మాటనున్న మర్యాద సర్వమ్ము
చెడ్డమాట నొకటి చెడును పూర్తి

தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே
நாவினாற் சுட்ட வடு.   (129)

అగ్గి గాల్చు మచ్చ లారును పూర్తిగాఁ
నన్నమాట మచ్చలార వెపుడు

கதங்காத்துக் கற்றடங்கல் ஆற்றுவான் செவ்வி
அறம்பார்க்கும் ஆற்றின் நுழைந்து.   (130)

కోప తాప మణచు కొనువాని క్షేమమ్ము
తనదిగానె జూఛు ధర్మమెపుడు.