కార్యసిద్ధి

வினைத்திட்பம் என்பது ஒருவன் மனத்திட்பம்
மற்றைய எல்லாம் பிற.   (௬௱௬௰௧ - 661)
 

సర్వకార్యసిద్ధి సంకల్ప సిద్ధియే
అన్ని దాని యందె యైక్యమగును. (౬౬౧)

ஊறொரால் உற்றபின் ஒல்காமை இவ்விரண்டின்
ஆறென்பர் ஆய்ந்தவர் கோள்.   (௬௱௬௰௨ - 662)
 

చిక్కులందు బడమి, శ్రేష్టమ్ము పడినచో
చొక్కి పోమి కార్యసూరు మతము. (౬౬౨)

கடைக்கொட்கச் செய்தக்க தாண்மை இடைக்கொட்கின்
எற்றா விழுமந் தரும்.   (௬௱௬௰௩ - 663)
 

పూనుకొన్న పనిని పూర్తిగావింపక
నిలువుకొన్నవాడు నిందపాలు. (౬౬౩)

சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம்
சொல்லிய வண்ணம் செயல்.   (௬௱௬௰௪ - 664)
 

చెప్పవచ్చు నెన్నొ చెప్పిన రీతిగా
ననుసరించు వార లరుదు జూడ. (౬౬౪)

வீறெய்தி மாண்டார் வினைத்திட்பம் வேந்தன்கண்
ஊறெய்தி உள்ளப் படும்.   (௬௱௬௰௫ - 665)
 

కీర్తి దెచ్చుపనుల కృతకృత్యు డైనచో
చక్రవర్తియైన సత్కరించు. (౬౬౫)

எண்ணிய எண்ணியாங்கு எய்து எண்ணியார்
திண்ணியர் ஆகப் பெறின்.   (௬௱௬௰௬ - 666)
 

కోరు వారి శ్రద్ధ కొఱతఁగాకున్నచో
కోరుకొన్న దెల్లఁ గూడివచ్చు. (౬౬౬)

உருவுகண்டு எள்ளாமை வேண்டும் உருள்பெருந்தேர்க்கு
அச்சாணி அன்னார் உடைத்து.   (௬௱௬௰௭ - 667)
 

ఆకృతిగని యెంచ కల్పుగా నొకనిని
తేరును కడచీలె తిరుగబెట్టు. (౬౬౭)

கலங்காது கண்ட வினைக்கண் துளங்காது
தூக்கங் கடிந்து செயல்.   (௬௱௬௰௮ - 668)
 

శంక లేక నొకటి సంకల్ప శుద్ధితో
విసుగు లేకఁ జేయ దొసఁగు రాదు. (౬౬౮)

துன்பம் உறவரினும் செய்க துணிவாற்றி
இன்பம் பயக்கும் வினை.   (௬௱௬௰௯ - 669)
 

విఘ్నములకు వెఱచి విడువక సత్కర్మ
పూర్తిజేయ వలయు పూనినట్లు. (౬౬౯)

எனைத்திட்பம் எய்தியக் கண்ணும் வினைத்திட்பம்
வேண்டாரை வேண்டாது உலகு.   (௬௱௭௰ - 670)
 

ఎన్ని యున్న లోక మన్నదు, దృఢచిత్త
మొండు లేని యెడల బెండుగాన. (౬౭౦)

பு. ஆ. முத்துக்கிருஷ்ணன் (திருக்குறள் இசைமலர்)

Raga: இந்துஸ்தான்பியாக்  |  Tala: ரூபகம்
கண்ணிகள்:
உருவு கண்டெள்ளாதே - குறள்
உரைப் பதைத் தள்ளாதே
உருள் பெருந் தேர்க்குள்ள அச்சாணி போன்றவர்
உலகத்தில் உள்ளார் கண்டீர்

கல்லுக்குச் சிற்றுளி போல் - பெருங்
கதவுக்குத் தாழினைப் போல்
சொல்வினைக் குரியவர் சிறியவர் ஆனாலும்
சுடர் தரும் நல் விளக்காம்

வல்லமை பேசிடுவார் - வீணில்
வாய்வீச்சு வீசிடுவார்
"சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம்
சொல்லிய வண்ணம் செயல்"

விண்ணில் பறந்திடலாம் - இம
வெற்பிலும் கொடி நாட்டலாம்
"எண்ணிய எண்ணியாங் கெய்துப எண்ணியர்
திண்ணிய ராகப் பெறின்"

துன்பம் உறவரினும் - மனம
துணிந்து செயலாற்றினால்
இன்பம் பயக்கும் வினை மக்களாட்சியில்
என்றென்றும் போற்றப் பெறும்




Popular Chapter

Popular Couplet

Repeated Word in Couplets
Most repeated word in Thirukkural
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

Repeated Word in Couplet Starting
Most common First word in the Couplets
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

Repeated Word in Couplet Ending
Most common Last word in the Couplets
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22