దుష్పాలన

கொலைமேற்கொண் டாரிற் கொடிதே அலைமேற்கொண்டு
அல்லவை செய்தொழுகும் வேந்து.   (551)

కష్టవెట్టునట్టి దుష్టరాజున కన్న
హంతకుండె మెచ్చనైన వాఁడు.

வேலொடு நின்றான் இடுவென் றதுபோலும்
கோலொடு நின்றான் இரவு.   (552)

దోచుకొన్న విధము దొంగలు కత్తెత్తి
యప్పుడవుడు పన్నులడుగు రాజు.

நாடொறும் நாடி முறைசெய்யா மன்னவன்
நாடொறும் நாடு கெடும்.   (553)

అనుదినమ్ముఁదప్పు లరయనిచోఁరాజు
చెడును రాజ్యలక్ష్మి ఘడియ ఘడియ.

கூழுங் குடியும் ஒருங்கிழக்கும் கோல்கோடிச்
சூழாது செய்யும் அரசு.   (554)

సంపదలను ప్రజల సర్వమ్ము గోల్పోవు
ధరణి విభుడు దప్పఁదండనీతి.

அல்லற்பட்டு ஆற்றாது அழுதகண் ணீரன்றே
செல்வத்தைத் தேய்க்கும் படை.   (555)

కష్టపడుచు ప్రజలు కార్చిడి కన్నీరె
కరగదీయు నృపుని కలిమి జలిమి.

மன்னர்க்கு மன்னுதல் செங்கோன்மை அஃதின்றேல்
மன்னாவாம் மன்னர்க் கொளி.   (556)

నీతియె క్షీతిపతి నెలకొను మార్గమౌ
నది దొఱంగ సర్వ మంతరించు.

துளியின்மை ஞாலத்திற்கு எற்றற்றே வேந்தன்
அளியின்மை வாழும் உயிர்க்கு.   (557)

వానలేని యట్టి వనుమతి విధమౌను
పాలకుండు దయకు బాహ్యుడైన.

இன்மையின் இன்னாது உடைமை முறைசெய்யா
மன்னவன் கோற்கீழ்ப் படின்.   (558)

వేదకన్న బాధ వెన్నిధిగా నున్న
రాజు నీతి దప్పి రాజ్యమేల.

முறைகோடி மன்னவன் செய்யின் உறைகோடி
ஒல்லாது வானம் பெயல்.   (559)

నీతి దప్పినట్టి నృపుడున్న రాజ్యన
చెదిరిపోవు మబ్బు చినుక బడక.

ஆபயன் குன்றும் அறுதொழிலோர் நூல்மறப்பர்
காவலன் காவான் எனின்.   (560)

పాడి తరిగిపోవు పఠియింప రార్యులు
ధర్మ దూరుడైన ధరణి విభుండు.