సంధ్యా సమయము

மாலையோ அல்லை மணந்தார் உயிருண்ணும்
வேலைநீ வாழி பொழுது.   (1221)

సంధ్య సంధ్య కాదు చంపంగ వచ్చిన
గాల మగునుగాదె కాముకులను.

புன்கண்ணை வாழி மருள்மாலை எம்கேள்போல்
வன்கண்ண தோநின் துணை.   (1222)

సంధెవయ్యు నీవు మంద మందెదవేల
నీకు గూడ తోడు లేకనేన.

பனிஅரும்பிப் பைதல்கொள் மாலை துனிஅரும்பித்
துன்பம் வளர வரும்.   (1223)

మంచుకనుల సంధ్య మంద మందమ్ముగా
వచ్చి వచ్చి బాధ హెచ్చుపవచు.

காதலர் இல்வழி மாலை கொலைக்களத்து
ஏதிலர் போல வரும்.   (1224)

విరహులందు సంధ్య ప్రియుడుండ నిదిజూచి
పగను దీర్చుకొనును వైరివిధము.

காலைக்குச் செய்தநன்று என்கொல் எவன்கொல்யான்
மாலைக்குச் செய்த பகை.   (1225)

ఉదయమునకు నెట్టి యుపకార మొనరించి
సంధ్య కేమి జేయజాలనైతి.

மாலைநோய் செய்தல் மணந்தார் அகலாத
காலை அறிந்த திலேன்.   (1226)

సంధ్యకాల మింత సంకటంబని నేను
తెలియనైతి ప్రియుని గలిసినపుడు.

காலை அரும்பிப் பகலெல்லாம் போதாகி
மாலை மலரும்இந் நோய்.   (1227)

ప్రొద్దుతోడబుట్టి పెద్దదై దినమంత
నిరియు సంధ్యవేళ విరహ బాధ.

அழல்போலும் மாலைக்குத் தூதாகி ஆயன்
குழல்போலும் கொல்லும் படை.   (1228)

వేణుగాన మపుడు వినిపించె మధురమై
చేదు గాగ నిపుడు చెవిని బడును.

பதிமருண்டு பைதல் உழக்கும் மதிமருண்டு
மாலை படர்தரும் போழ்து.   (1229)

సద్దుమణిగియుండు సంధ్యలో నూరెల్ల
నాయకుండు లేని నావిధంబు.

பொருள்மாலை யாளரை உள்ளி மருள்மாலை
மாயும்என் மாயா உயிர்.   (1230)

సఖుని వెడచిపెట్టి చావకుండెడి నన్ను
చంపుతున్న దిపుడు సంధ్య వచ్చి.