ఆక్రోశము

அவர்நெஞ்சு அவர்க்காதல் கண்டும் எவன்நெஞ்சே
நீஎமக்கு ஆகா தது.   (1291)

వారి వారి మనసు వారితో సుండంగ
నీవు నట్లె యుండ వేల మనస.

உறாஅ தவர்க்கண்ட கண்ணும் அவரைச்
செறாஅரெனச் சேறியென் நெஞ்சு.   (1292)

ప్రేమలేని వాని ప్రియుడంచునో మనస
చూచునంత జేర చూచుటేల.

கெட்டார்க்கு நட்டார்இல் என்பதோ நெஞ்சேநீ
பெட்டாங்கு அவர்பின் செலல்.   (1293)

కాముకులకు వేరె గతిలేమి యెఱిగియో
వెంట దగులుచుంటి వెఱ్ఱిమనస.

இனிஅன்ன நின்னொடு சூழ்வார்யார் நெஞ்சே
துனிசெய்து துவ்வாய்காண் மற்று.   (1294)

ప్రణయ కోపమందు భయపెట్టినట్లుగా
వలపు దీర్చుకొనక వగతువేల.

பெறாஅமை அஞ்சும் பெறின்பிரிவு அஞ்சும்
அறாஅ இடும்பைத்தென் நெஞ்சு.   (1295)

చేరకున్న బాధ చేరిన విడబాధ
బాధ దప్ప దింక బాడు మనస.

தனியே இருந்து நினைத்தக்கால் என்னைத்
தினிய இருந்ததென் நெஞ்சு.   (1296)

మనస! నీవు నన్ను దినివేయు చున్నావు
ఒంటరిగను నెట్టు లుండ నింక.

நாணும் மறந்தேன் அவர்மறக் கல்லாஎன்
மாணா மடநெஞ்சிற் பட்டு.   (1297)

మరువరాని సిగ్గు మరచితి ప్రియునందు
మనసు దగలి వేరుమార్గ మరయ.

எள்ளின் இளிவாம்என்று எண்ணி அவர்திறம்
உள்ளும் உயிர்க்காதல் நெஞ்சு.   (1298)

జీవతాశ నతని చెడుగుల వర్ణింప
తనకె లోపమంచు దలచి దలచి.

துன்பத்திற்கு யாரே துணையாவார் தாமுடைய
நெஞ்சந் துணையல் வழி.   (1299)

మనసుకన్న తోడు మరి యెవ్వరుందురు
తోడులేదటంచు దుఃఖమేల.

தஞ்சம் தமரல்லர் ஏதிலார் தாமுடைய
நெஞ்சம் தமரல் வழி.   (1300)

తనదు మనసె తనకు ననువు గానప్పుడు
చుట్టరికము వేరు చుట్టుకొనునె.