ఆతిథ్యము

இருந்தோம்பி இல்வாழ்வ தெல்லாம் விருந்தோம்பி
வேளாண்மை செய்தற் பொருட்டு.   (81)

ఇల్లు గాచి ధనము నినుమడించుట యెల్ల
నతిథి నాదు కొనఁగ నగును జూవె.

விருந்து புறத்ததாத் தானுண்டல் சாவா
மருந்தெனினும் வேண்டற்பாற் றன்று.   (82)

అతిథి బయటనుంచి యమృతమే యైన దా
నారగింప న్యాయ దూరమగును.

வருவிருந்து வைகலும் ஓம்புவான் வாழ்க்கை
பருவந்து பாழ்படுதல் இன்று.   (83)

ఆశ్రితాళి నెఱిగి యాతిథ్యమిచ్చిన
నందుచేత లేమి నొందడెవడు.

அகனமர்ந்து செய்யாள் உறையும் முகனமர்ந்து
நல்விருந்து ஓம்புவான் இல்.   (84)

అతిథి రాక కలరి యాతిథ్యమిచ్చెడి
వారి యింట లక్ష్మి వలచి నిలచు.

வித்தும் இடல்வேண்டும் கொல்லோ விருந்தோம்பி
மிச்சில் மிசைவான் புலம்.   (85)

అతిథి తినఁగ మిగులు నన్నంబు దినువాని
నేల విత్తనంబు లేల జల్ల?

செல்விருந்து ஓம்பி வருவிருந்து பார்த்திருப்பான்
நல்வருந்து வானத் தவர்க்கு.   (86)

ఒకరి నుపచరించి నొకరికి నెదురొడ్డు
నతఁడు దేవతాళి కతిథి యగును.

இனைத்துணைத் தென்பதொன் றில்லை விருந்தின்
துணைத்துணை வேள்விப் பயன்.   (87)

విందు యజ్ఞమగును వితరణ ఫలితమౌ
యర్థరహిత మింత యంత యనుట.

பரிந்தோம்பிப் பற்றற்றேம் என்பர் விருந்தோம்பி
வேள்வி தலைப்படா தார்.   (88)

పెట్టలేని వారె చెట్టు పుట్టల జేరి
యాశ లెడలి నట్టు లలమ టింత్రు.

உடைமையுள் இன்மை விருந்தோம்பல் ஓம்பா
மடமை மடவார்கண் உண்டு.   (89)

ఉండి యువచరింపకుండెడి దారిద్ర్య
ముండు నజ్ఞులందె మెండుగాను.

மோப்பக் குழையும் அனிச்சம் முகந்திரிந்து
நோக்கக் குநழ்யும் விருந்து.   (90)

అనిచమనెడు పుష్ప మాప్రూణమున వాడు
జూచినంత నతిథి లేచిపోవ.