నిర్వియోగము

செல்லாமை உண்டேல் எனக்குரை மற்றுநின்
வல்வரவு வாழ்வார்க் குரை.   (1151)

విడువలేని నన్ను నడుగుము విడుటైన
వచ్చుచఱకు నుండువారి నడుగు.

இன்கண் உடைத்தவர் பார்வல் பிரிவஞ்சும்
புன்கண் உடைத்தால் புணர்வு.   (1152)

సుఖముఁ జూపులందెఁ జూచితి మున్ముందు
దూరమగుట నెంచ దుఃఖ మొదవు.

அரிதரோ தேற்றம் அறிவுடையார் கண்ணும்
பிரிவோ ரிடத்துண்மை யான்.   (1153)

బుద్ధిమంతులకును పోసగును విడిపోవ
విడువ ననుట నమ్మ వీలుగాదు.

அளித்தஞ்சல் என்றவர் நீப்பின் தெளித்தசொல்
தேறியார்க்கு உண்டோ தவறு.   (1154)

వదల నన్నవాడు వదలుచో నాశతో
నంటుకొన్న దాని దగునె తప్పు.

ஓம்பின் அமைந்தார் பிரிவோம்பல் மற்றவர்
நீங்கின் அரிதால் புணர்வு.   (1155)

కాచుకొనుటె లెస్సకాంతుని విడనీక
వీడిపోయెనేని కూడు టరుదు.

பிரிவுரைக்கும் வன்கண்ணர் ஆயின் அரிதவர்
நல்குவர் என்னும் நசை.   (1156)

వెళ్ళి వత్తునంచు విడబడు నవ్వాడు
మళ్ళి వత్తునన్న మాట నిజమె.

துறைவன் துறந்தமை தூற்றாகொல் முன்கை
இறைஇறவா நின்ற வளை.   (1157)

విరహ బాధ నెఱుకబరచెడి విధముగా
గాంతు దిట్టఁదొడగె గాజు లూడి.

இன்னாது இனன்இல்ஊர் வாழ்தல் அதனினும்
இன்னாது இனியார்ப் பிரிவு.   (1158)

వారివారు లేని వాసమ్ము కష్టమ్ము
అరయగా వియోగ మంతకన్న.

தொடிற்சுடின் அல்லது காமநோய் போல
விடிற்சுடல் ஆற்றுமோ தீ.   (1159)

అగ్గివంటి బాధ ననగాదు వలపును
తగులు బాధ దీని దాకకున్న.

அரிதாற்றி அல்லல்நோய் நீக்கிப் பிரிவாற்றிப்
பின்இருந்து வாழ்வார் பலர்.   (1160)

సాగనంపి బాధ సహియించి జీవింప
నిష్టపడెడివార లెంద రిలను.