దుష్కృతము

சிறப்பீனும் செல்வம் பெறினும் பிறர்க்குஇன்னா
செய்யாமை மாசற்றார் கோள்.   (311)

సకల సంవదలును సమకూరుటే యైన
నార్యులొల్ల రకృత మాచరింప

கறுத்துஇன்னா செய்தவக் கண்ணும் மறுத்தின்னா
செய்யாமை மாசற்றார் கோள்.   (312)

కంటుబెట్టి యొకఁడు కలిగించగా కీడు
బదులు జేయఁజోరు బుధులు దాని.

செய்யாமல் செற்றார்க்கும் இன்னாத செய்தபின்
உய்யா விழுமந் தரும்.   (313)

నీవు జేయకున్న న్నీకెగ్గు జేసిన
బదులు జేయుటయును బాధకరమె.

இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நாண
நன்னயஞ் செய்து விடல்.   (314)

చెడ్డ జేసెనేని సిగ్గు పడగవాడు
మంచి చేయుటగును మహిత శిక్ష.

அறிவினான் ஆகுவ துண்டோ பிறிதின்நோய்
தந்நோய்போல் போற்றாக் கடை.   (315)

ఆత్మ కష్టమట్లు నన్యుల కష్టాలు
తెలియ లేనివాని తేలివి తేలివె?

இன்னா எனத்தான் உணர்ந்தவை துன்னாமை
வேண்டும் பிறன்கண் செயல்.   (316)

బాధ యగు నటంచు బోధపడిన వేన్క
ఒరుల కట్టి బాధ నొనంగ నేల?

எனைத்தானும் எஞ்ஞான்றும் யார்க்கும் மனத்தானாம்
மாணாசெய் யாமை தலை.   (317)

ఎప్పు డెవ్వరికిని యెంత మాత్రమ్మును
చెడువు దలపకున్న శిక్ష గుణము.

தன்னுயிர்ககு ஏன்னாமை தானறிவான் என்கொலோ
மன்னுயிர்க்கு இன்னா செயல்.   (318)

తనకు దెలియుగాదె తనబాధ యెట్టిదో
యెదిటి బాధలెందు కెఱుగలేడు.

பிறர்க்கின்னா முற்பகல் செய்யின் தமக்குஇன்னா
பிற்பகல் தாமே வரும்.   (319)

నేడు నీవుజేయు కీడది నిన్నంటి
స్వయముగానె రేపు వచ్చి చేరు.

நோயெல்லாம் நோய்செய்தார் மேலவாம் நோய்செய்யார்
நோயின்மை வேண்டு பவர்.   (320)

బాధలేని బ్రతుకు బ్రతుకంగ నెంచిన
బాధ బెట్టకుండ బ్రతుక వలయు.