కలహ సూక్ష్మత

பெண்ணியலார் எல்லாரும் கண்ணின் பொதுஉண்பர்
நண்ணேன் பரத்தநின் மார்பு.   (1311)

అతని వెడద రొమ్ము నంటనైతిని దాకి
ముగ్దలెల్ల జూచి మురిసిరౌట.

ஊடி இருந்தேமாத் தும்மினார் யாம்தம்மை
நீடுவாழ் கென்பாக் கறிந்து.   (1312)

తుమ్మె తుమ్మునంత తుమ్ముకు నూరని
పలుకరింతు ననుచు నలుక మాని.

கோட்டுப்பூச் சூடினும் காயும் ஒருத்தியைக்
காட்டிய சூடினீர் என்று.   (1313)

మాల వేసుకొంటి మానిని వెంటనే
ఎవరు చూడ వేషమిట్టు లనియె.

யாரினும் காதலம் என்றேனா ஊடினாள்
யாரினும் யாரினும் என்று.   (1314)

ఎక్కువ గలదంటి మక్కువ నీపైన
అందు కలిగె నెవరి కన్న యనుచు.

இம்மைப் பிறப்பில் பிரியலம் என்றேனாக்
கண்நிறை நீர்கொண் டனள்.   (1315)

ఇంక నిన్ను విడువ నీ జన్మకని జెప్ప
కార దొడగె నీరు కండ్లనుండి.

உள்ளினேன் என்றேன்மற் றென்மறந்தீர் என்றென்னைப்
புல்லாள் புலத்தக் கனள்.   (1316)

తలచుచుంటినంటి తలుపంగ మరచితో
అనుచు విడచె గౌగిలిని తనంత.

வழுத்தினாள் தும்மினேன் ஆக அழித்தழுதாள்
யாருள்ளித் தும்மினீர் என்று.   (1317)

మంగళమనె తుమ్ము మరునిముసమ్ము కే
ఎవరి దలచి తుమ్మితివనె యలుక.

தும்முச் செறுப்ப அழுதாள் நுமர்உள்ளல்
எம்மை மறைத்திரோ என்று.   (1318)

తుమ్ము నణచుకొంటి తొయ్యలి వెంటనే
తలచుకొన్న దెవరు దెలుపమనియె.

தன்னை உணர்த்தினும் காயும் பிறர்க்கும்நீர்
இந்நீரர் ஆகுதிர் என்று.   (1319)

కొసరి కొసరి యెట్లొ కోపంబు దీర్పగా
ఎవరు నేర్పరనుచు యింతి యలిగె.

நினைத்திருந்து நோக்கினும் காயும் அனைத்துநீர்
யாருள்ளி நோக்கினீர் என்று.   (1320)

మౌనముగను జూడ మనసులో నీకున్న
మగువ యెవ్వతె యని మరల యలిగె.