ఇల్లాలు

மனைக்தக்க மாண்புடையள் ஆகித்தற் கொண்டான்
வளத்தக்காள் வாழ்க்கைத் துணை.   (51)

తగిన గుణము లుండి తన భర్త చేతిని
మిగులఁ బెట్టఁగలుగు మగువె భార్య.

மனைமாட்சி இல்லாள்கண் இல்லாயின் வாழ்க்கை
எனைமாட்சித் தாயினும் இல்.   (52)

పత్ని గుణము లేక ప్రఖ్యాతి ఇతరత్ర
నెంత యున్నఁదన కదేమి ఫలము.

இல்லதென் இல்லவள் மாண்பானால் உள்ளதென்
இல்லவள் மாணாக் கடை?.   (53)

లేని దేది? భార్య జ్ఞానమ్ము గలదైన!
ఉన్నదేది? గుణము సున్నయైన!

பெண்ணின் பெருந்தக்க யாவுள கற்பென்னும்
திண்மைஉண் டாகப் பெறின்.   (54)

స్త్రీ ల కన్నఁ గొప్పఁ జెప్ప నేమున్నది
చూపు మానమందు మోపిరేని

தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள்
பெய்யெனப் பெய்யும் மழை.   (55)

పతిని దైవముగను వ్రతమున్న యిల్లాలు
కురియు మన్న క్షణమె కురియు వాన

தற்காத்துத் தற்கொண்டாற் பேணித் தகைசான்ற
சொற்காத்துச் சோர்விலாள் பெண்.   (56)

తనదు గౌరవమ్ము తన భర్త గౌరవ
మరసి కాచుకొన్న యామె భార్య ,

சிறைகாக்கும் காப்பெவன் செய்யும் மகளிர்
நிறைகாக்கும் காப்பே தலை.   (57)

కంచ నాటి స్త్రీలఁ గనిపెట్ట గా లేము
మాన మందు వారి మనసులేమి .

பெற்றாற் பெறின்பெறுவர் பெண்டிர் பெருஞ்சிறப்புப்
புத்தேளிர் வாழும் உலகு.   (58)

ధవుని సేవయందు ధర్మంబు దప్పని
సాధ్వి కమర లోక సౌఖ్యమబ్బు

புகழ்புரிந்த இல்லிலோர்க்கு இல்லை இகழ்வார்முன்
ஏறுபோல் பீடு நடை.   (59)

పరువుఁ గాచునట్టి పత్నియే లేకున్న
నడగ ఠీవిరాదు నలువురందు.

மங்கலம் என்ப மனைமாட்சி மற்று
அதன் நன்கலம் நன்மக்கட் பேறு.   (60)

సాధ్వికిఁ దగినట్టి సంతాన మబ్బిన
మంగళముగ గృహము మహిమ గాంచు .