ధర్మోద్ఘాటన

சிறப்புஈனும் செல்வமும் ஈனும் அறத்தினூஉங்கு
ஆக்கம் எவனோ உயிர்க்கு.   (31)

ధనమునిచ్చు మోక్ష ధనము నిచ్చును ధర్మ
మంతకన్న వలసినట్టి దేది?

அறத்தினூஉங்கு ஆக்கமும் இல்லை அதனை
மறத்தலின் ஊங்கில்லை கேடு.   (32)

ధర్మనిష్ఠ కన్నఁదగు మంచి లేదొండు
వీడ దాని కన్నఁ గీడు లేదు.

ஒல்லும் வகையான் அறவினை ஓவாதே
செல்லும்வாய் எல்லாஞ் செயல்.   (33)

చేయఁదగిన విధులఁ జేయుటే ధర్మంబు
ధర్మమెడలి బ్రతుకఁ దగవు గాదు.

மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன்
ஆகுல நீர பிற.   (34)

ఆత్మశుద్ధి కన్న నన్యధర్మము లేదు
మెప్పు కోసముండు మిగత వన్ని.

அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும்
இழுக்கா இயன்றது அறம்.   (35)

ఈర్ష్య , యాశ , కోప మెడలుట తోఁబాటు
ప్రల్లదములు లేమి పాడి యౌను.

அன்றறிவாம் என்னாது அறஞ்செய்க மற்றது
பொன்றுங்கால் பொன்றாத் துணை.   (36)

ధర్మమొకటె వచ్చుఁదాఁ జనునప్పుడు
నేడు నాఁడు లెక్కఁ జూడఁదగదు.

அறத்தாறு இதுவென வேண்டா சிவிகை
பொறுத்தானோடு ஊர்ந்தான் இடை.   (37)

పల్లకి నొకఁడెత్త పైనుండు నొక్కఁడు
ధర్మ మింతె యనుచుఁ దలచరాదు.

வீழ்நாள் படாஅமை நன்றாற்றின் அஃதொருவன்
வாழ்நாள் வழியடைக்கும் கல்.   (38)

ఉన్ననాళ్ళు మరువకున్నచో ధర్మంబు
భవము నడ్డగించు బండ యదియె.

அறத்தான் வருவதே இன்பம் மற்றெல்லாம்
புறத்த புகழும் இல.   (39)

ధర్మమందె సుఖము తక్కిన దంతయు
సుఖముగాదు కీర్తి శూన్యమగును.

செயற்பால தோரும் அறனே ஒருவற்கு
உயற்பால தோரும் பழி.   (40)

ఆచరింప వలసినట్టి దగును ధర్మ
మాచరింప రాని దగును నింద.