త్రాగుబోతు

உட்கப் படாஅர் ஒளியிழப்பர் எஞ்ஞான்றும்
கட்காதல் கொண்டொழுகு வார்.   (௯௱௨௰௧ - 921)
 

కీర్తి మాయమగును, కేవల పడనగును
కల్లు ద్రాగు గుణముఁ గలిగెనేని. (౯౨౧)

உண்ணற்க கள்ளை உணில்உண்க சான்றோரான்
எண்ணப் படவேண்டா தார்.   (௯௱௨௰௨ - 922)
 

పెద్దవారి మంచి వద్దనుకొన్నచో
త్రాగి తందనాల నూఁగవచ్చు. (౯౨౨)

ஈன்றாள் முகத்தேயும் இன்னாதால் என்மற்றுச்
சான்றோர் முகத்துக் களி.   (௯௱௨௰௩ - 923)
 

త్రాగువాని, కన్నతల్లియే రోసిన
నార్యులైన వారి నడుగనేల? (౯౨౩)

நாண்என்னும் நல்லாள் புறங்கொடுக்கும் கள்ளென்னும்
பேணாப் பெருங்குற்றத் தார்க்கு.   (௯௱௨௰௪ - 924)
 

మానహానుడైన మదుపానరక్తుని
చేష్టఁజూడఁ సిగ్గె సిగ్గుపడును. (౯౨౪)

கையறி யாமை உடைத்தே பொருள்கொடுத்து
மெய்யறி யாமை கொளல்.   (௯௱௨௰௫ - 925)
 

వైక మొసగి బదులు మైకమ్ము గొనునట్టి
మందబుద్ధికేమి మంచి గలుగు. (౯౨౫)

துஞ்சினார் செத்தாரின் வேறல்லர் எஞ்ஞான்றும்
நஞ்சுண்பார் கள்ளுண் பவர்.   (௯௱௨௰௬ - 926)
 

నిద్ర, చావువాని నియమమ్ము సమమౌను
విషము మదువు రెంటి విధము నట్లె. (౯౨౬)

உள்ளொற்றி உள்ளூர் நகப்படுவர் எஞ்ஞான்றும்
கள்ளொற்றிக் கண்சாய் பவர்   (௯௱௨௰௭ - 927)
 

ఎఱుగనట్లు మరుగు మరుగున త్రాకిన
ఉమ్మి వేతురతని నూరివారు. (౯౨౭)

களித்தறியேன் என்பது கைவிடுக நெஞ்சத்து
ஒளித்ததூஉம் ஆங்கே மிகும்.   (௯௱௨௰௮ - 928)
 

త్రాగుబోతువాఁడు త్రాగలే డనలేడు
తప్పు దాచ వాని తరముగాదు. (౯౨౮)

களித்தானைக் காரணம் காட்டுதல் கீழ்நீர்க்
குளித்தானைத் தீத்துரீஇ அற்று.   (௯௱௨௰௯ - 929)
 

దీపమెత్తి నీళ్ళ దేవిన చందమ్ము
త్రాగువాని మాన్పఁ దరముగాదు. (౯౨౯)

கள்ளுண்ணாப் போழ்திற் களித்தானைக் காணுங்கால்
உள்ளான்கொல் உண்டதன் சோர்வு.   (௯௱௩௰ - 930)
 

బోదలేనివేళ బోదలో బడియున్న
వానిఁజూడ బుద్ధి వచ్చునేమొ. (౯౩౦)

பு. ஆ. முத்துக்கிருஷ்ணன் (திருக்குறள் இசைமலர்)

Raga: இந்துஸ்தான் காப்பி  |  Tala: ஆதி
பல்லவி:
விரும்பலாகுமோ கள்ளை - அந்த
வேசியின் உறவினும் வெறுக்க வேண்டும் இதை

சரணம்:
வரும் பொருள் யாவையும் இறைக்கும் - முன்பு
வாய்த்த நற்புகழையும் குறைக்கும்
இரும்பான தேகமும் வளைக்கும் - காவல்
இதயக் கோட்டையையும் துளைக்கும்

நீரினில் மூழ்கிய ஒருவன் - சொல்லும்
நீதியின் விளக்கமா பெருவன் - அவன்
ஊரில் எங்கும் நகைக்கப் படுவான் - தொழில்
ஊக்கமும் குன்றியே கெடுவான்

முன்னையோர் நல்வழியும் கெடுக்கும் - நல்லான்
முகமும் நாணிப் புறம் கொடுக்கும் - சொல்லத்
தன்னையே தான் மறந்திருக்கும் - பெற்ற
தாயின் அன்புள்ளமும் வெறுக்கும்

துஞ்சினார் செத்தாரின் வேறல்லர் - என்றும்
நஞ்சுண்பார் கள்ளுண்பவர் என்பர் - இதை
நெஞ்சிற் கொண்டால் மயக்கம் தெளிவார் - குறள்
நீதியாம் கள்ளுண்ணாமை புரிவார்




Popular Chapter

Popular Couplet

Repeated Word in Couplets
Most repeated word in Thirukkural
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

Repeated Word in Couplet Starting
Most common First word in the Couplets
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

Repeated Word in Couplet Ending
Most common Last word in the Couplets
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22