ఉపకృతి

கைம்மாறு வேண்டா கடப்பாடு மாரிமாட்டு
என்ஆற்றுங் கொல்லோ உலகு.   (211)

వాన కొరదేది వర్షించి నందుల
కుపకరించు వార లుందు రల్లు

தாளாற்றித் தந்த பொருளெல்லாம் தக்கார்க்கு
வேளாண்மை செய்தற் பொருட்டு.   (212)

వివిధ వృత్తులందు విత్తంబు జేర్చుట
నీయ దగినవారి కిచ్చు కొఱకె.

புத்தே ளுலகத்தும் ஈண்டும் பெறலரிதே
ஒப்புரவின் நல்ல பிற.   (213)

ఉపకృతి సరియగు నుత్తమ ధర్మంబు
భువిని లేదు మరియు దివిని లేదు.

ஒத்த தறவோன் உயிர்வாழ்வான் மற்றையான்
செத்தாருள் வைக்கப் படும்.   (214)

ఉపకరించువార లున్నట్లుగా లెక్క
సాయ పడనివారు చచ్చినట్లె.

ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம்
பேரறி வாளன் திரு.   (215)

ఊరివారికెల్ల నుపయోగపడు నుయ్యి
నిండినట్లె దాత కుండు ధనము.

பயன்மரம் உள்ளூர்ப் பழுத்தற்றால் செல்வம்
நயனுடை யான்கண் படின்.   (216)

మార్గ మధ్యమందు మాధుర్య ఫలవృక్ష
మున్న విధము దాతకున్న ధనము.

மருந்தாகித் தப்பா மரத்தற்றால் செல்வம்
பெருந்தகை யான்கண் படின்.   (217)

సకల రోగములకు సంజీవి మూలిక
ధనము దాతకున్న క్షణము నందు.

இடனில் பருவத்தும் ஒப்புரவிற் கொல்கார்
கடனறி காட்சி யவர்.   (218)

దాతయైనవాడు దారిద్ర్యమున నున్న
మాన డుపకరించు మార్గ మతఁడు

நயனுடையான் நல்கூர்ந்தா னாதல் செயும்நீர
செய்யாது அமைகலா வாறு.   (219)

ఈయలేని సమయ మేర్పడినప్పుడే
దాత వేదనంచు దలంచు టెల్ల.

ஒப்புரவி னால்வரும் கேடெனின் அஃதொருவன்
விற்றுக்கோள் தக்க துடைத்து.   (220)

ఉపకరింపఁ దనకు నపకారమేయైన
కూలిజేసి యైన గొనుము దాని.