ఉపకృతి

மருந்தாகித் தப்பா மரத்தற்றால் செல்வம்
பெருந்தகை யான்கண் படின்.   (௨௱௰௭ - 217) 

సకల రోగములకు సంజీవి మూలిక
ధనము దాతకున్న క్షణము నందు.  (౨౧౭)


తమిళ (தமிழ்)
செல்வமானது பெருந்தகுதி உடையவனிடம் சேர்தல், பிணி தீர்க்கும் மருந்தாகிப் பயன் தரத் தவறாத மருந்துமரம் போல எப்போதும் பயன் தருவதாகும் (௨௱௰௭)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)


ஒப்புரவாகிய பெருந்தகைமை உடையவனிடத்து செல்வம் சேர்ந்தால் அஃது எல்லா உறுப்புகளுக்கும் மருந்தாகிப் பயன்படத் தவறாத மரம் போன்றது. (௨௱௰௭)
— மு. வரதராசன்


பெரும் பண்பாளனிடம் சேரும் செல்வம், எல்லா உறுப்புகளாலும் மருந்து ஆகிப் பயன்படுவதிலிருந்து தப்பாத மரம் போலப் பொதுவாகும். (௨௱௰௭)
— சாலமன் பாப்பையா


பிறருக்கு உதவிடும் பெருந்தன்மையாம் ஒப்புரவு உடையவனிடம், செல்வம் சேர்ந்தால் அது ஒரு நல்ல மரத்தின் எல்லா உறுப்புகளும் மருந்தாகப் பயன்படுவது போன்றதாகும் (௨௱௰௭)
— மு. கருணாநிதி


బ్రాహ్మీ లిపి (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)
𑀫𑀭𑀼𑀦𑁆𑀢𑀸𑀓𑀺𑀢𑁆 𑀢𑀧𑁆𑀧𑀸 𑀫𑀭𑀢𑁆𑀢𑀶𑁆𑀶𑀸𑀮𑁆 𑀘𑁂𑁆𑀮𑁆𑀯𑀫𑁆
𑀧𑁂𑁆𑀭𑀼𑀦𑁆𑀢𑀓𑁃 𑀬𑀸𑀷𑁆𑀓𑀡𑁆 𑀧𑀝𑀺𑀷𑁆 (𑁓𑁤𑁛𑁘)
— (தமிழி / தமிழ்ப் பிராமி)


ఇంగ్లీష్ (English)
Marundhaakith Thappaa Maraththatraal Selvam
Perundhakai Yaankan Patin
— (Transliteration)


maruntākit tappā marattaṟṟāl celvam
peruntakai yāṉkaṇ paṭiṉ.
— (Transliteration)


When wealth comes to the large-hearted, It is like an unfailing medicine tree.

హిందీ (हिन्दी)
चूके बिन ज्यों वृक्ष का, दवा बने हर अंग ।
त्यों धन हो यदि वह रहे, उपकारी के संग ॥ (२१७)


మలయాళం (മലയാളം)
സമ്പൽ സമൃദ്ധിയുള്ളപ്പോളൗ ദാര്യശീലനാം പുമാൻ സമൂലമുപയോജ്യമാമൗഷധത്തരുവായിടും (൨൱൰൭)

కన్నడ (ಕನ್ನಡ)
ಉಪಕಾರವೇ ಮೊದಲಾದ ಹಿರಿಯ ಗುಣವುಳ್ಳವನ ಬಳಿ ಐಶ್ವರ್ಯವು ಬಂದು ನೆಲಸಿ ನಿಂತರೆ, ರೋಗರುಜಿನಗಳನ್ನು ಪರಿಹರಿಸುವ ಸಂಜೀವಿನಿ ಮರದಂತೆ (ಹತ್ತು ಜನರಿಗೆ ಪ್ರಯೋಜನ ದೊರೆಯುವುದು) (೨೧೭)

సంస్కృత (संस्कृतम्)
सर्वभागैर्यथा वृक्ष: रुग्णानामौषधायते।
लोकोपकारिणो वित्तं तथा सर्वोपकारकम्॥ (२१७)


సింహళ భాష (සිංහල)
පහසුවෙන් ලබතැකි- බෙහෙත් ගසකට සම වේ උපකාර අඳුනන- දනන් වෙත යම් දනක් වී නම් (𑇢𑇳𑇪𑇧)

చైనీస్ (汉语)
慷慨好施者之資財猶如健全之藥樹. (二百十七)
程曦 (古臘箴言)


మలయు (Melayu)
Kekayaan di-tangan orang yang berbudi dapat di-umpamakan saperti pohon yang menjadi ubat yang dapat di-gunakan oleh segala orang.
Ismail Hussein (Tirukkural)


కొరియన్ (한국어)
관대한 사람의 부는 반드시 치료되는 약품으로 제공되는 약초 나무와 같다. (二百十七)

రష్యన్ (Русский)
Когда, богатство приходит в руки великодушного мудреца, оно уподобляется целительному древу

అరబ్ (العَرَبِيَّة)
ثروة سخي كمثل شجرة تستعمل أوراقها وقشورها فى إعداد الأدوية والدهان للمرضى والجرحى (٢١٧)


ఫ్రెంచ్ (Français)
Se trouve-t-elle entre les mains d’un homme de grande générosité, la richesse est pareille à l’arbre, dont toutes les parties servent de médicaments.

జర్మన్ (Deutsch)
Reichtum in Händen des Wohltätigen ist wie ein leerer Baum voller Heilmittel.

స్వీడిష్ (Svenska)
Liksom det livgivande trädet verkar livgivande för sin omgivning, verkar den rikedom livgivande som tillfaller den storsinte.
Yngve Frykholm (Tirukkural)


లాటిన్ (Latīna)
Divitiae , quae obtingunt moris observantissimo, similes sunt arbori, quae medicinam ferens, nemini se subtrahit. (CCXVII)

పోలిష్ (Polski)
Jest odzieżą, żywnością i środkiem leczniczym Dla tych, co już zarobić niezdolni.
Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)


மரமும் செல்வமும் — முல்லை பி. எல். முத்தையா (திருக்குறள் உவமைகள்)

மூலிகை மரமானது இலை, பூ, காய், பட்டை ஆகியவற்றை மருந்துக்காக கொடுக்கிறது. கடைசியில் தன்னைத் தாங்கும் வேரையும் பிடுங்கி கொள்ளவும் அனுமதிக்கிறது.

அதுபோல, அறிவுடையோன், அன்புடையோன் ஆகியோரைவிட, பெருந்தன்மை உள்ளவனிடம் செல்வம் இருந்தால், பல வகையாலும் அவன் வேண்டியவர்க்கு உதவுவான். தனக்காக கூட எதையும் வைத்துக்கொள்ள மாட்டான். அவனுக்கு அத்தகைய தியாக உள்ளம்!

கர்ணன், குமணன், சிபிச்சக்கரவர்த்தி ஆகியோர் கதை நினைவுக்கு வருகிறது.

(காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகம் உருவாவதற்காக, தம் பொருள் முழுவதையும் வழங்கியதோடு, தம்முடைய இல்லத்தையும் கொடுத்தார், வள்ளல் அழகப்பா என்று மக்கள் கூறுகிறார்கள். அவரைப் போல பலர் இருந்திருக்கக்கூடும்!)


மருந்தாகித் தப்பா மரத்தற்றால் செல்வம் பெருந்தகை யான்கண் படின்.
ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்

Popular Chapter

Popular Couplet

Repeated Word in Couplets
Most repeated word in Thirukkural
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

Repeated Word in Couplet Starting
Most common First word in the Couplets
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

Repeated Word in Couplet Ending
Most common Last word in the Couplets
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22