О низменности.

அறைபறை அன்னர் கயவர்தாம் கேட்ட
மறைபிறர்க்கு உய்த்துரைக்க லான்.   (௲௭௰௬ - 1076) 

Низменные подобны барабану, в который громко бьют, провозглашая тем самым чужие тайны

Тамил (தமிழ்)
கேட்ட மறைவான செய்திகளைப் பிறரிடம் தாங்கிக் கொண்டு போய்ச் சொல்வதனால், கீழ்மக்கள் செய்தியறிவிக்க அறையப்படும் பறை போன்றவர்கள் ஆவர் (௲௭௰௬)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)


கயவர், தாம் கேட்டறிந்த மறைப்பொருளைப் பிறர்க்கு வலிய கொண்டுபோய்ச் சொல்லுவதலால், அறையப்படும் பறை போன்றவர். (௲௭௰௬)
— மு. வரதராசன்


தாம் அறிந்த ரகசியங்களைப் பிறரிடம் வலியச் சென்று சொல்லுவதால், அடிக்கப்படும் பறையைப் போன்றவர் கயவர். (௲௭௰௬)
— சாலமன் பாப்பையா


மறைக்கப்பட வேண்டிய இரகசியம் ஒன்றைக் கேட்ட மாத்திரத்தில், ஓடிச் சென்று பிறருக்குச் சொல்லுகிற கயவர்களைத், தமுக்கு என்னும் கருவிக்கு ஒப்பிடலாம் (௲௭௰௬)
— மு. கருணாநிதி


Брахми (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)
𑀅𑀶𑁃𑀧𑀶𑁃 𑀅𑀷𑁆𑀷𑀭𑁆 𑀓𑀬𑀯𑀭𑁆𑀢𑀸𑀫𑁆 𑀓𑁂𑀝𑁆𑀝
𑀫𑀶𑁃𑀧𑀺𑀶𑀭𑁆𑀓𑁆𑀓𑀼 𑀉𑀬𑁆𑀢𑁆𑀢𑀼𑀭𑁃𑀓𑁆𑀓 𑀮𑀸𑀷𑁆 (𑁥𑁡𑁗)
— (தமிழி / தமிழ்ப் பிராமி)


английский (English)
Araiparai Annar Kayavardhaam Ketta
Maraipirarkku Uyththuraikka Laan
— (Transliteration)


aṟaipaṟai aṉṉar kayavartām kēṭṭa
maṟaipiṟarkku uytturaikka lāṉ.
— (Transliteration)


The base are like drum, for they sound off to others Every secret they hear.

хинди (हिन्दी)
नीच मनुज ऐसा रहा, जैसा पिटता ढोल ।
स्वयं सुने जो भेद हैं, ढो अन्यों को खोल ॥ (१०७६)


телугу (తెలుగు)
మర్మమెకటిఁ దెలియ మారుమ్రోగింతురు
తగుదు రల్పు లెల్లఁ దప్పెడలకు. (౧౦౭౬)


малаялам (മലയാളം)
ദുഷ്ടൻ കേൾക്കും രഹസ്യങ്ങളൂരുചുറ്റിപ്പരത്തിടും പറവെച്ചറിയിക്കുന്ന ഗ്രാമക്കോൽക്കാരനാണയാൾ (൲൭൰൬)

каннада (ಕನ್ನಡ)
ಕೀಳಾದ ಜನರು ತಾವು ಕೇಳಿ ತಿಳಿದ ರಹಸ್ಯ ವಿಶಯಗಳನ್ನು ಇತರರಿಗೆ ಒಯ್ದು ಬಯಲು ಮಾಡುವುದರಿಂದ ಅವರನ್ನು ಪ್ರಚಾರಕ್ಕೆ ಬಳಿಸುವ ನಗಾರಿಗೆ ಹೋಲಿಸಬಹುದು. (೧೦೭೬)

санскрит (संस्कृतम्)
श्रुतानेकरहस्यानां स्वयं गत्वा बहुस्थालीम् ।
प्रसारणात् प्रचारार्थपटहा: सन्ति दुर्जना: ॥ (१०७६)


сингальский (සිංහල)
අසන ලද රහසක් - පිට කරණට සමත් වෙති ඒ නිසා කයවරු- ගහන බෙර වැනි වේය නිතරම (𑇴𑇰𑇦)

китайский (汉语)
卑鄙之人如鼓, 因其不宣揚人之隱秘不止也. (一千七十六)
程曦 (古臘箴言)


малайский (Melayu)
Saperti gendang-lah orang2 yang keji itu: kerana mereka tidak akan berehat sa-belum menyampaikan kapada orang lain rahsia yang di- amanahkan kapada-nya.
Ismail Hussein (Tirukkural)


Корейский (한국어)
남의비밀을공개하기때문에, 야비한근성을가진자는두들겨맞는드럼과같다. (千七十六)

арабский (العَرَبِيَّة)
الأوساط مثل الطبول لا يستريحون حتى أن يبوحوا باسرارهم التى اودعت فى قلوبهم (١٠٧٦)


французы (Français)
L'homme vil ressemble au tambour que l'on bat, parce qu'il colporte partout et dévoile aux autres les secrets qu'il surprend.

немецкий (Deutsch)
Die Niedrigen sind wie die Trommel, die geschlagen wird, da sie anderen weitergeben, was sie als Geheimnis hegen.

шведский (Svenska)
De gemena är som trumman som fås att ljuda. Ivrigt för de vidare till andra vad de har fått höra i hemlighet. 
Yngve Frykholm (Tirukkural)


Латинский (Latīna)
Romines viles pulsato tympano sunt similes; auditum enim secretum statim aliis renuntiant. (MLXXVI)

польский (Polski)
Są jak bębny huczące o cudzych potknięciach, Przemilczając swe własne podłości.
Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)


கயவரும் தம்பட்டமும் — முல்லை பி. எல். முத்தையா (திருக்குறள் உவமைகள்)

அரசர்கள், ஒரு செய்தியை பொதுமக்களுக்கு தெரியப்படுத்துவதற்குத் தம்பட்டம் (பறை) அடித்து சொல்லுவது வழக்கம்.

அதுபோல, கயவர்கள், தாங்கள் கேள்விப்பட்ட இரகசியங்களை உண்மைகளை, மற்றவர்களுக்கு உடனே சொல்லிவிடுவார்கள். கயவர்களுக்கு இயல்பான அறிவு இல்லை. மேலும், இரகசியத்தை பாதுகாக்க கூடியவர்கள் அல்லர். அதோடு, நம்பிக்கைக்கு உரியவர்களாகவும் நடந்து கொள்ளமாட்டார்கள்.

இரகசியங்களை கூறுவதால், உண்டாகக்கூடிய தீமை, பழி, குற்றங்களை கயவர்கள் அறியமாட்டார்கள். கயவர்கள் தம்பட்டம் போன்றவர்கள் என்று நகைச்சுவையாக கூறப்படுகிறது.

(இக்காலத்திலும், நீதிமன்றத்தின் மூலம் ஏலம், ஜப்தி முதலியவற்றை தம்பட்டம் அடிக்க செய்து, தெரிவிக்கப்படுகிறது கயவர்கள் என்றால் கீழ்மக்கள், கெட்ட செயல் புரிவோர்.)


அறைபறை அன்னர் கயவர்தாம் கேட்ட மறைபிறர்க்கு உய்த்துரைக்க லான்.
ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்

Popular Chapter

Popular Couplet

Repeated Word in Couplets
Most repeated word in Thirukkural
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

Repeated Word in Couplet Starting
Most common First word in the Couplets
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

Repeated Word in Couplet Ending
Most common Last word in the Couplets
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22