О достоинстве

தலையின் இழிந்த மயிரனையர் மாந்தர்
நிலையின் இழிந்தக் கடை.   (௯௱௬௰௪ - 964) 

Если люди роняют свое достоинство, совершая дурные деяния,,о от них такая же польза, как от волоса; упавшего с головы

Тамил (தமிழ்)
நல்ல குடியிலே பிறந்தவர்கள், தம் உயர்வான நிலையை விட்டுத் தாழ்ந்த விடத்து, தலையைவிட்டு அகன்று விழுந்த மயிரைப் போல இழிவு அடைவார்கள் (௯௱௬௰௪)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)


மக்கள் தம் உயர்வுக்கு உரிய நிலையிலிருந்து தாழ்ந்த போது, தலைமையிலிருந்து விழுந்து தாழ்வுற்ற மயிரினைப் போன்றவர் ஆவர். (௯௱௬௰௪)
— மு. வரதராசன்


நல்ல குடும்பத்தில் பிறந்தவர் மானம் காக்காமல் தம் உயர்ந்த நிலையை விட்டுவிட்டுத் தாழ்ந்தால், தலையை விட்டு விழுந்த மயிரைப் போன்றவர் ஆவார். (௯௱௬௰௪)
— சாலமன் பாப்பையா


மக்களின் நெஞ்சத்தில் உயர்ந்த இடம் பெற்றிருந்த ஒருவர் மானமிழந்து தாழ்ந்திடும்போது, தலையிலிருந்து உதிர்ந்த மயிருக்குச் சமமாகக் கருதப்படுவார் (௯௱௬௰௪)
— மு. கருணாநிதி


Брахми (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)
𑀢𑀮𑁃𑀬𑀺𑀷𑁆 𑀇𑀵𑀺𑀦𑁆𑀢 𑀫𑀬𑀺𑀭𑀷𑁃𑀬𑀭𑁆 𑀫𑀸𑀦𑁆𑀢𑀭𑁆
𑀦𑀺𑀮𑁃𑀬𑀺𑀷𑁆 𑀇𑀵𑀺𑀦𑁆𑀢𑀓𑁆 𑀓𑀝𑁃 (𑁚𑁤𑁠𑁕)
— (தமிழி / தமிழ்ப் பிராமி)


английский (English)
Thalaiyin Izhindha Mayiranaiyar Maandhar
Nilaiyin Izhindhak Katai
— (Transliteration)


talaiyiṉ iḻinta mayiraṉaiyar māntar
nilaiyiṉ iḻintak kaṭai.
— (Transliteration)


Men fallen from high stature Are like hair fallen from the head.

хинди (हिन्दी)
गिरते हैं जब छोड़कर, निज सम्मानित स्थान ।
नर बनते हैं यों गिरे, सिर से बाल समान ॥ (९६४)


телугу (తెలుగు)
పదని భ్రష్ఠులైన పతితకేశములట్లు
విలువ చెడుట లోక విదితమగును. (౯౬౪)


малаялам (മലയാളം)
മാന്യരായുള്ളവർ സ്ഥാനം വിട്ടുതാഴെപ്പതിക്കുകിൽ തലയിൽ നിന്നുതിർന്നുള്ള രോമം പോൽ കരുതപ്പെടും (൯൱൬൰൪)

каннада (ಕನ್ನಡ)
ಮನುಷ್ಯರು ಉನ್ನತವಾದ ಸ್ಥಿತಿಯಲ್ಲಿದ್ದು ಆ ನೆಲೆಯಿಂದ ಕೆಳಗಿಳಿದಾಗ, ತಲೆಯಿಂದ ಉದುರಿ ಬಿದ್ದ ಕೂದಲಿನಂತಾಗುತ್ತಾರೆ. (ಅಂದರೆ- ಉದುರಿ ಹೋದ ಕೂದಲಿನಂತೆ ಜನರ ನಿರ್ಲಕ್ಷ್ಯಕ್ಕೀಡಾಗುತ್ತಾರೆ) (೯೬೪)

санскрит (संस्कृतम्)
सम्भूता अपि सद्वेशं लोके श्रेष्ठपदच्युता: ।
उत्तमाङ्गपरिभ्रष्टकेशतुल्या भवन्ति ते ॥ (९६४)


сингальский (සිංහල)
පහත වන් විට දී - ගරු බව නැතිව මිනිසුන් පිළිකූල් කෙරෙනුයේ - හිසෙන් ගිලිහුණ කෙස් රොදක් මෙනි (𑇩𑇳𑇯𑇤)

китайский (汉语)
人損高名, 猶如髮之散落面上. (九百六十四)
程曦 (古臘箴言)


малайский (Melayu)
Lihat-lah mereka yang telah menchemarkan nama yang mulia: mereka sama-lah dengan rambut di-kepala yang di-chukor dan di- buang.
Ismail Hussein (Tirukkural)


Корейский (한국어)
귀족가문출신의사람이높은지위에서추락하는경우, 머리에서떨어지는머리카락과같다. (九百六十四)

арабский (العَرَبِيَّة)
إن الذين يودون أن يبقىأسمهم دائما لا يرتكبون أعمالا غير شريفة والذين يرتكبونها ثبلهم كمثل رجال يقطعون خصل شعرهم من فوق رؤوسهم ويطرحونها على الأرض (٩٦٤)


французы (Français)
Les hommes qui appartiennent à une bonne famille ressemblent, lorsqu'ils sont dégénérés aux cheveux qui tombent de la tête.

немецкий (Deutsch)
Leute, deren Ehre gefallen ist, gleichen dem Haar, das vom Haupt fällt.

шведский (Svenska)
När stora män råkar i förfall är det som när håret faller av huvudet.
Yngve Frykholm (Tirukkural)


Латинский (Latīna)
Viri, qui infra statum suum decidant, similes sunt capillis, qui ex capitc decidant. (CMLXIV)

польский (Polski)
Tak jak włosy spadają i brudzą się kurzem, Tak i ty możesz zlecieć z kolumny.
Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)


புகழப்படுவதும் இகழப்படுவதும் — முல்லை பி. எல். முத்தையா (திருக்குறள் உவமைகள்)

தலையில் மயிர் இருக்கும்போது, அது அழகாக இருக்கிறது. தலைக்கும் பாதுகாப்பாகவும் அமைகிறது. வாசனை எண்ணெயை தடவி, வாரி, பேணி, பாதுகாக்கிறோம். ஆனால், அது உதிர்ந்து கீழே விழுந்துவிட்டால் அதை பொருட்படுத்துவது இல்லை. காணும்போது அருவருப்பு உண்டாகிறது.

அதுபோல, ஒருவன் உயர்வான நிலையில் இருந்து பலருக்கு உதவிகளும் செய்கிறான். மக்களிடையே உயர்ந்து விளங்குகிறான் புகழ் பெறுகிறான், போற்றப்படுகிறான். ஆனால், அவனுடைய நிலையில் இருந்து அவன் தாழ்ந்துவிட்டபோது, எல்லோராலும் இகழப்படுவான். அலட்சியமாக எண்ணப்படுவான்.

தாழ்ந்தநிலை என்பது பணத்தால் அல்ல! குற்றம் செய்தல், கெட்ட நடத்தை, இலிவான செயல், அதிகார மமதை, பிறர் பொருளை அபகரித்தல், பொதுச்சொத்தை திருடுதல் இத்தகையவையால், தாழ்ந்த நிலை இழிந்த நிலையை அடைவது ஆகும்.


தலையின் இழிந்த மயிரனையர் மாந்தர் நிலையின் இழிந்தக் கடை.
ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்

Popular Chapter

Popular Couplet

Repeated Word in Couplets
Most repeated word in Thirukkural
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

Repeated Word in Couplet Starting
Most common First word in the Couplets
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

Repeated Word in Couplet Ending
Most common Last word in the Couplets
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22