Как взвесить свои возможности.

பீலிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டஞ்
சால மிகுத்துப் பெயின்.   (௪௱௭௰௫ - 475) 

Даже перьев павлина не выдержит воз,,сли наваливать их непомерной массой

Тамил (தமிழ்)
மென்மையான மயிலிறகை ஏற்றியுள்ள வண்டியும், அம் மயிலிறகையே அளவுக்கு மிகுதியாக ஏற்றினால் அச்சு முரிந்து கெடும் (௪௱௭௰௫)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)


மயிலிறகு ஏற்றிய வண்டியே ஆனாலும் , அந்த பண்டமும் (அளவோடு ஏற்றாமல்) அளவு கடந்து மிகுதியாக ஏற்றினால் அச்சு முறியும். (௪௱௭௰௫)
— மு. வரதராசன்


மயில்தோகைதானே என்று அதை அளவுக்கு அதிகமாக வண்டியில் ஏற்றினால் வண்டியின் அச்சு முறிந்துபோகும். (௪௱௭௰௫)
— சாலமன் பாப்பையா


மயில் இறகாக இருந்தாலும்கூட அதிகமாக ஏற்றப்பட்டால் வண்டியின் அச்சு முரிகின்ற அளவுக்கு அதற்குப் பலம் வந்து விடும் (௪௱௭௰௫)
— மு. கருணாநிதி


Брахми (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)
𑀧𑀻𑀮𑀺𑀧𑁂𑁆𑀬𑁆 𑀘𑀸𑀓𑀸𑀝𑀼𑀫𑁆 𑀅𑀘𑁆𑀘𑀺𑀶𑀼𑀫𑁆 𑀅𑀧𑁆𑀧𑀡𑁆𑀝𑀜𑁆
𑀘𑀸𑀮 𑀫𑀺𑀓𑀼𑀢𑁆𑀢𑀼𑀧𑁆 𑀧𑁂𑁆𑀬𑀺𑀷𑁆 (𑁕𑁤𑁡𑁖)
— (தமிழி / தமிழ்ப் பிராமி)


английский (English)
Peelipey Saakaatum Achchirum Appantanjjch
Aala Mikuththup Peyin
— (Transliteration)


pīlipey cākāṭum acciṟum appaṇṭañ
cāla mikuttup peyiṉ.
— (Transliteration)


Too great a load of even peacock-feathers Will break the axle-tree of the cart.

хинди (हिन्दी)
मोर-पंख से ही सही, छकड़ा लादा जाय ।
यदि लादो वह अत्यधिक, अक्ष भग्न हो जाय ॥ (४७५)


телугу (తెలుగు)
తేలిక యని నెమలి తూలికలను బండి
నిందవేయఁ నిరును మొండి యగును. (౪౭౫)


малаялам (മലയാളം)
മയിലിൻ ചിറകായാലും വണ്ടിയിൽ കൊണ്ടുപോകവേ ഭാരം ദുർവഹമായെങ്കിൽ വണ്ടിയച്ചു മുറിഞ്ഞുപോം (൪൱൭൰൫)

каннада (ಕನ್ನಡ)
ನವಿಲುಗರಿ ತುಂಬಿದ ಗಾಡಿಯೇ ಆದರೂ, ಅದನ್ನು ಅಳತೆ ಮೀರಿ ತುಂಬಿದರೆ, ಗಾಡಿಯ ಅಚ್ಚು ಮುರಿದು ಹೋಗುತ್ತದೆ. (೪೭೫)

санскрит (संस्कृतम्)
लघुपिञ्छं भारवस्तु भवेन्नात्र विचारणा ।
भारपूर्णे तु शकटे भवेदक्षस्य भञ्जनम् ॥ (४७५)


сингальский (සිංහල)
මොණර පිල් වුව ගැල - කොතෙකූත් පැටෙව් පමණට ඉසිලිය නොහැකි බර - නිසා අලවංගූව කැඩීයයි (𑇤𑇳𑇰𑇥)

китайский (汉语)
車輛負載過重, 卽使所加者爲孔雀之羽, 其輪軸亦將崩毁也. (四百七十五)
程曦 (古臘箴言)


малайский (Melayu)
Bulu merak pun, jikalau terlalu banyak di-muatkan, akan mematah- kan gandar roda gerobak.
Ismail Hussein (Tirukkural)


Корейский (한국어)
가벼운공작의깃털이라도과적재되면짐수레의축이부러진다. (四百七十五)

арабский (العَرَبِيَّة)
العجلة التى حملة عليها ريش الطواويس باكثر مما يلزم ربما ينكر فكذلك محاربة الأعداء الكثيرن تودى إلى هلاكة الملك (٤٧٥)


французы (Français)
L'essieu de la charrette, même chargée de plumes de paon, se brisa si le fardeau est plus lourd qu'il ne peut supporter.

немецкий (Deutsch)
Wird die Wagenachse überladen, bricht sie, auch wenn es nur Pfauenfedern sind.

шведский (Svenska)
Lastar man en kärra med påfågelsfjädrar bryter man dock dess axel om man lastar den över dess förmåga.
Yngve Frykholm (Tirukkural)


Латинский (Latīna)
Etiam in curru, pennis pavoninis oncrato, diffringetur axis, si merce illa nimium eum oneraveris. (CDLXXV)

польский (Polski)
Nawet pod pióropuszem z rydwanu się zwalisz, Jeśli pióra utkała ułuda,
Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)


மென்மையும் வலிமையும் — முல்லை பி. எல். முத்தையா (திருக்குறள் உவமைகள்)

ஒரு வண்டியில் அளவுக்குமீறி சாமான்கள் ஏற்றினால், என்ன ஆகும்? அச்சு முறிந்து வண்டி நொறுங்கி சேதமடையும்.

மயிலின் தொகையானது மிக மென்மையானது தான் என்றாலும், அதைக்கூட அளவுக்கு அதிகமாக வண்டியில் ஏற்றி வைத்தால், அந்த பாரத்தை தாங்க மாட்டாது அச்சு முறிந்துவிடும்.

அதுபோல, ஒரு பொருளின் தன்மையை காட்டிலும், அதனுடைய வலிமையை அறிந்து கொள்ள வேண்டும். உதாரணமாக, ஒரு எதிரி எளியவன், பலவீனன் என்று அலட்சியமாக எண்ணிவிடக் கூடாது. அவனைப் போன்ற பலர் ஒன்றுபட்டால், அவர்கள் மிகுந்த பலசாலிகளாக ஆகிவிடுவார்கள். ஆகவே, பலரையும் பகைவர்கள் ஆக்கிக் கொண்டு வாழ முடியாது.


பீலிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டஞ் சால மிகுத்துப் பெயின்.
ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்

Popular Chapter

Popular Couplet

Repeated Word in Couplets
Most repeated word in Thirukkural
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

Repeated Word in Couplet Starting
Most common First word in the Couplets
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

Repeated Word in Couplet Ending
Most common Last word in the Couplets
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22