Об избежании злых деяний

தீயவை செய்தார் கெடுதல் நிழல்தன்னை
வீயாது அஇஉறைந் தற்று.   (௨௱௮ - 208) 

Как тень неотступно следует за человеком, так и злые деяния преследуют его вплоть до его кончины

Тамил (தமிழ்)
தீய செயல்களைச் செய்தவர் கெடுதல் உறுதி என்பது, நிழல் தன்னை விடாமல் வந்து தன் காலடியிலேயே தங்கி இருத்தலைப் போன்றதாகும் (௨௱௮)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)


தீய செயல்களைச் செய்தவர் கேட்டை அடைதல், ஒருவனுடைய நிழல் அவனை விடாமல் வந்து அடியில் தங்கியிருத்தலைப் போன்றது. (௨௱௮)
— மு. வரதராசன்


பிறர்க்குத் தீமை செய்தவர் அழிவது, அவரை அவரது நிழல் விடாது கால்களின் கீழே தங்கியிருப்பது போலாம். (௨௱௮)
— சாலமன் பாப்பையா


ஒருவருடைய நிழல் அவருடனேயே ஒன்றியிருப்பதைப்போல், தீய செயல்களில் ஈடுபடுகிறவர்களை விட்டுத் தீமையும் விலகாமல், தொடர்ந்து ஒட்டிக் கொண்டிருக்கும் (௨௱௮)
— மு. கருணாநிதி


Брахми (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)
𑀢𑀻𑀬𑀯𑁃 𑀘𑁂𑁆𑀬𑁆𑀢𑀸𑀭𑁆 𑀓𑁂𑁆𑀝𑀼𑀢𑀮𑁆 𑀦𑀺𑀵𑀮𑁆𑀢𑀷𑁆𑀷𑁃
𑀯𑀻𑀬𑀸𑀢𑀼 𑀅𑀇𑀉𑀶𑁃𑀦𑁆 𑀢𑀶𑁆𑀶𑀼 (𑁓𑁤𑁙)
— (தமிழி / தமிழ்ப் பிராமி)


английский (English)
Theeyavai Seydhaar Ketudhal Nizhaldhannai
Veeyaadhu Atiurain Thatru
— (Transliteration)


tīyavai ceytār keṭutal niḻaltaṉṉai
vīyātu a'i'uṟain taṟṟu.
— (Transliteration)


The consequences of evil deeds leave not Like the persistent shadow under the feet.

хинди (हिन्दी)
दुष्ट- कर्म जो भी करे, यों पायेगा नाश ।
छोड़े बिन पौरों तले, छाँह करे ज्यों वास ॥ (२०८)


телугу (తెలుగు)
అడుగు లండి సీడ నడయాడు నట్లుగా
చెడువు విడువ దెవుడు చెడ్డవాని. (౨౦౮)


малаялам (മലയാളം)
ദേഹത്തിൻറെ നിഴൽനിന്നോടൊപ്പമെപ്പോഴുമുള്ള പോൽ നീചെയ്യും ദുഷ്ടകർമ്മത്തിൻ ദുഷ്ഫലം നിന്നോടോപ്പമാം (൨൱൮)

каннада (ಕನ್ನಡ)
ಒಬ್ಬನ ನೆಲಳು ಅವನ ಪಾದದಡಿಯಲ್ಲಿಯೇ ಸೇರಿಕೊಂಡಿರುವಂತೆ ಅವನ ದುಷ್ಕೃತ್ಯಗಳೂ ಅವನನ್ನು ಬೆಂಬಿಡದೆ ಅಳಿವಿಗೆ ಕಾರಣವಾಗುವುದು. (೨೦೮)

санскрит (संस्कृतम्)
नरच्छाया यथा तस्य पादाभ्यां सह गच्छति।
प्रतिजन्म तथा यान्ती दुष्कृतिर्बाधते नरम्॥ (२०८)


сингальский (සිංහල)
පා මුල සිටින මෙන් - අත් නො හැර සේයා රූ නපුරුකම පවති - එයින් හේ වැනසීම නියතයි (𑇢𑇳𑇨)

китайский (汉语)
罪惡隨人如影隨形, 毁滅而後已. (二百八)
程曦 (古臘箴言)


малайский (Melayu)
Saperti bayang2 yang tidak pernah lenyap tetapi mengesani selalu di- mana sa-saorang itu beredar, bagitu-lah juga perbuatan yang jahat akan mengekori dan memusnahkan peranchang-nya.
Ismail Hussein (Tirukkural)


Корейский (한국어)
그림자가 발자취를 따라가는 것처럼 파멸은 악당을 따라간다. (二百八)

арабский (العَرَبِيَّة)
الشر يتبعك مثل الظل الذى لا يفارقك أينما تكون فيه ويوديك إلى الهلاكة (٢٠٨)


французы (Français)
Le mal que l’on fait suit le coupable, ainsi que l’ombre suit l’homme, partout sans jamais le quitter.

немецкий (Deutsch)
Das Verderben folgt dem, der Böses int, wie der Scharten seinem Fuß - er trennt sich nicht von ihm.

шведский (Svenska)
Onda människors undergång är såsom skuggan som oförtröttligt följer dem och <alltid> stannar under deras fötter.
Yngve Frykholm (Tirukkural)


Латинский (Latīna)
lnteritus ejus, qui malcficia admittit, similis umbrae est, quae semper aliquem vestigiis consequitur (CCVIII)

польский (Polski)
Kiedy biegniesz - jak cienie zdążają za tobą, Gdy dobiegniesz – już stoją na warcie.
Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)


நிழலும் தீமையும் — முல்லை பி. எல். முத்தையா (திருக்குறள் உவமைகள்)

ஒருவனுடைய நிழலானது காலை வேளையில் மிகப்பெரிதாக நீண்டு காணப்படுகிறது. நேரம் ஆக, ஆக, உச்சிப்பொழுதில் அந்த நிழல் சுருங்கி, முடிவில் அவனுடைய காலின் கீழேயே ஒடுங்கிவிடுகிறது.

அதுபோல, ஒருவன் தீமை செய்யும்பொழுது, யாருக்கோ செய்வதாகத்தான் அவன் நினைக்கிறான்.

ஆனால் நாள் ஆக ஆக அந்த தீமையானது தனக்கே பகையாகி அவனையே கெடுத்து அழித்துவிடுவது நிச்சயம். எனினும், தீமை செய்யும்பொழுது, அவன் உணர்வதில்லை.

ஒருவன் செய்த தீய செயல் நிழல்போல அவனைத் தொடரும் என்று மக்கள் கூறுவார்கள்.


தீயவை செய்தார் கெடுதல் நிழல்தன்னை வீயாது அஇஉறைந் தற்று.
ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்

Popular Chapter

Popular Couplet

Repeated Word in Couplets
Most repeated word in Thirukkural
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

Repeated Word in Couplet Starting
Most common First word in the Couplets
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

Repeated Word in Couplet Ending
Most common Last word in the Couplets
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22