കുറ്റം

செருக்குஞ் சினமும் சிறுமையும் இல்லார்
பெருக்கம் பெருமித நீர்த்து.   (௪௱௩௰௧ - 431)
 

കാമക്രോധമദം പോലെ ദോഷങ്ങളിയലാത്തവർ ഭോഗങ്ങളളവില്ലാതെ വാഴ്ചയിലുടമപ്പെടും (൪൱൩൰൧)

இவறலும் மாண்பிறந்த மானமும் மாணா
உவகையும் ஏதம் இறைக்கு.   (௪௱௩௰௨ - 432)
 

ഗുണമില്ലാത്തലോഭവും അളവില്ലാത്ത ഭോഗവും നന്മയില്ലാത്ത മാനവും നേതാക്കൾക്കരുതായ്മയാം (൪൱൩൰൨)

தினைத்துணையாங் குற்றம் வரினும் பனைத்துணையாக்
கொள்வர் பழிநாணு வார்.   (௪௱௩௰௩ - 433)
 

കുറ്റം ഭയന്നമാലോകർ തിനയോളം കുറ്റങ്ങളെ പനയോളമെന്ന് കണ്ടു കാത്തു സൂക്ഷിച്ചുകൊള്ളുമേ (൪൱൩൰൩)

குற்றமே காக்க பொருளாகக் குற்றமே
அற்றந் த்ரூஉம் பகை.   (௪௱௩௰௪ - 434)
 

കുറ്റം ചെയ്യുന്നതാണെങ്കിൽ ശത്രുതക്കിടയാക്കിടും തന്നാൽ കുറ്റം ഭവിക്കാതെ കാത്തുകൊള്ളുന്നതുത്തമം (൪൱൩൰൪)

வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர்
வைத்தூறு போலக் கெடும்.   (௪௱௩௰௫ - 435)
 

കുറ്റം വരാതെ സൂക്ഷിക്കാൻ വയ്യാത്തവൻറെ ജീവിതം അഗ്നിയോടു സമീപിക്കും വൈക്കോൽ തുമ്പിന് തുല്യമാം (൪൱൩൰൫)

தன்குற்றம் நீக்கிப் பிறர்குற்றங் காண்கிற்பின்
என்குற்ற மாகும் இறைக்கு.   (௪௱௩௰௬ - 436)
 

ആത്മശോധനയാൽ സ്വന്തം കുറ്റം കണ്ടൊഴിവാക്കണം ശേഷമന്യരുടെ ദോഷം കണ്ടാൽ കുറ്റമൊഴിഞ്ഞിടും (൪൱൩൰൬)

செயற்பால செய்யா திவறியான் செல்வம்
உயற்பால தன்றிக் கெடும்.   (௪௱௩௰௭ - 437)
 

ധനത്താൽ നിറവേറ്റെണ്ടും ധർമ്മം ചെയ്യാതെ സ്വാർത്ഥനായ് കയ്യടക്കിയൊതുക്കുന്ന ധനം നാശമടഞ്ഞിടും (൪൱൩൰൭)

பற்றுள்ளம் என்னும் இவறன்மை எற்றுள்ளும்
எண்ணப் படுவதொன் றன்று.   (௪௱௩௰௮ - 438)
 

ചെലവാക്കാൻ മടികാട്ടിപ്പിശുക്കാൽ ചേർത്തുവെച്ചിടും ധനത്തോടൊട്ടി നിൽക്കുന്ന കുറ്റം വമ്പിച്ചതായിടും (൪൱൩൰൮)

வியவற்க எஞ்ஞான்றும் தன்னை நயவற்க
நன்றி பயவா வினை.   (௪௱௩௰௯ - 439)
 

ഒരു നാളും സ്വയം നന്മയെണ്ണിമേന്മ നടിക്കൊലാ നന്മ നൽകാത്ത കാര്യങ്ങൾ നിർവഹിക്കാതിരിക്കണം (൪൱൩൰൯)

காதல காதல் அறியாமை உய்க்கிற்பின்
ஏதில ஏதிலார் நூல்.   (௪௱௪௰ - 440)
 

സ്വയമിച്ച്ഛാനുഭോഗങ്ങൾ ഗോപ്യമായ് തന്നെ വെക്കുകിൽ ശത്രുവാലുളവാകുന്ന ദ്രോഹമേൽക്കാതെ പാഴിലാം (൪൱൪൰)

பு. ஆ. முத்துக்கிருஷ்ணன் (திருக்குறள் இசைமலர்)

രാഗ: அட்டாணா  |  തല: ரூபகம்
பல்லவி:
ஓடிப் போ! போ! குற்றமே! நீ
ஓடிப் போய் விடுவாய்
ஒரு நொடியும் நிற்காதே
மறுபடி கால் வைக்காதே

அநுபல்லவி:
தேடிப்பெற்ற அறிவுச் செல்வம்
தேர்ந்த மக்கள் ஆட்சிச் செல்வம்
கூடி வாழும் நேரத்திலே
குற்றமே நீ உட் புகுந்தால்
கொன்றிடுவோம் கூரம்பால்

சரணம்:
அழவைத் தரும் பகையாய் வரும் குற்றமே
அறியாமை கல்லாமை ஈயாமை குற்றமே
வழிவிட்டுத் தன்புகழ் பேசிடும் குற்றமே
மான முறை கெட்டாயே
மாய வலைப் பட்டாயே

வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர்
வைத்திடும் தூறுபோல் கெடும் எனவே மன்னர்
பெறுமதி கொள்ளவே பேசும் திருக்குறள்
பெரியாரின் துணை கண்டோம்
பிழை பட்டாய் உனை வேண்டோம்




ജനപ്രിയമായ അധ്യായം

ജനപ്രിയമായ ഈരടി

ഈരടിയിലെ ആവർത്തിക്കപ്പെട്ട പദം
തിരുക്കുറലിലെ ഏറ്റവും കൂടുതൽ ആവർത്തിച്ച പദം
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

ഈരടിയുടെ ആരംഭത്തിൽ ആവർത്തിച്ചുള്ള വാക്ക്
ഈരടിയിലെ ഏറ്റവും സാധാരണമായ ആദ്യ വാക്ക്
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

ഈരടിയുടെ അവസാനത്തിൽ ആവർത്തിച്ചുള്ള വാക്ക്
ഈരടിയിലെ ഏറ്റവും സാധാരണമായ അവസാന വാക്ക്
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22