సభ

உணர்வ துடையார்முன் சொல்லல் வளர்வதன்
பாத்தியுள் நீர்சொரிந் தற்று.   (௭௱௰௮ - 718) 

ఆలకించు వారి నరసి మాటాడుట
ఫలితమున్న చేను బార్చినట్లు.  (౭౧౮)


తమిళ (தமிழ்)
சொல்லின் பயனை உணர்கின்றவர்களின் முன்பாக ஒன்றைச் சொல்லுதல், நல்ல பயிர் வளருகின்ற பாத்தியினுள்ளே, நீர் சொரிந்தாற் போலப் பெரும்பயன் தருவதாகும் (௭௱௰௮)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)


தாமே உணர்கின்ற தன்மை உடையவரின் முன் கற்றவர் பேசுதல், தானே வளரும் பயிருள்ள பாத்தியில் நீரைச் சொரிந்தாற் போன்றது. (௭௱௰௮)
— மு. வரதராசன்


பிறர் சொல்லாமலேயே தாமே பலவற்றையும் அறிந்து கொள்ளும் அறிவுத் திறம் உடையவர் கூடியுள்ள அவையில் பேசுவது வளரும் பயிர் நிற்கும் பாத்தியில் நீரினைப் பாய்ச்சியது போலாம். (௭௱௰௮)
— சாலமன் பாப்பையா


உணர்ந்து கொள்ளக்கூடிய ஆற்றல் உள்ளவர்களின் முன்னிலையில் பேசுதல், வளரக்கூடிய பயிர் உள்ள பாத்தியில் நீர் பாய்ச்சுவது போலப் பயன் விளைக்கும் (௭௱௰௮)
— மு. கருணாநிதி


బ్రాహ్మీ లిపి (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)
𑀉𑀡𑀭𑁆𑀯 𑀢𑀼𑀝𑁃𑀬𑀸𑀭𑁆𑀫𑀼𑀷𑁆 𑀘𑁄𑁆𑀮𑁆𑀮𑀮𑁆 𑀯𑀴𑀭𑁆𑀯𑀢𑀷𑁆
𑀧𑀸𑀢𑁆𑀢𑀺𑀬𑀼𑀴𑁆 𑀦𑀻𑀭𑁆𑀘𑁄𑁆𑀭𑀺𑀦𑁆 𑀢𑀶𑁆𑀶𑀼 (𑁘𑁤𑁛𑁙)
— (தமிழி / தமிழ்ப் பிராமி)


ఇంగ్లీష్ (English)
Unarva Thutaiyaarmun Sollal Valarvadhan
Paaththiyul Neersorin Thatru
— (Transliteration)


uṇarva tuṭaiyārmuṉ collal vaḷarvataṉ
pāttiyuḷ nīrcorin taṟṟu.
— (Transliteration)


Speaking before a receptive audience Is like watering a nursery of growing plants.

హిందీ (हिन्दी)
बुद्धिमान के सामने, जो बोलता सुजान ।
क्यारी बढ़ती फसल की, यथा सींचना जान ॥ (७१८)


మలయాళం (മലയാളം)
വിജ്ഞന്മാരുടെ സം‍ഘത്തിൽ‍ വിദ്വാൻ ചെയ്യുന്ന ഭാഷണം‍ സ്വയം‍ മുളക്കും‍ തോട്ടത്തിൽ‍ നീരോടുന്നതു പോലെയാം‍ (൭൱൰൮)

కన్నడ (ಕನ್ನಡ)
ತಾವು ತಿಳಿಯಬಲ್ಲ ಸಾಮರ್ಥ್ಯವುಳ್ಳವರ ಮುಂದೆ, ಹೇಳುವುದು, ಸ್ವಾಭಾವಿಕವಾಗಿ ಬೆಳೆಯುವ ಸಸಿಯ ಪಾತಿಯಲ್ಲಿ ನೀರನ್ನು ಸುರಿದಂತೆ. (೭೧೮)

సంస్కృత (संस्कृतम्)
स्वतोऽर्थग्राहिणामग्रे पण्डितोत्तमभाषणम् ।
रूढसस्ये त्वालवाले जलसेचनवद्भवेत् ॥ (७१८)


సింహళ భాష (සිංහල)
විමසන නැණැතියන් - ඉදිරියෙ කරන කතනය පැල වැඩෙන කොටුවට - සිසිල් දියවත් කිරීමත් මෙනි (𑇧𑇳𑇪𑇨)

చైనీస్ (汉语)
陳辭於賢明之衆,類如灌漑田禾也. (七百十八)
程曦 (古臘箴言)


మలయు (Melayu)
Menyampaikan uchapan nasihat kapada mereka yang tinggi daya pengertian-nya ada-lah saperti menyiramkan ayer kapada akar tum- boh2an.
Ismail Hussein (Tirukkural)


కొరియన్ (한국어)
세심한청중에게말하는것은비옥한작물의밭에급수하는것과같다. (七百十八)

రష్యన్ (Русский)
Выступать перед мудрыми — то же, что давать влагу полям с зазеленевшими всходами

అరబ్ (العَرَبِيَّة)
إلقاء خطبة مليئة بالنصائح الطيبة أمام أصحاب الفهم مثله كمثل من يسقى ويروى جذور النبات الخضرة (٧١٨)


ఫ్రెంచ్ (Français)
Discourir dans une réunion d'hommes, capables d'examiner sans erreur les paroles, c'est arroser un carré de plantes qui croissent d'elles-mêmes.

జర్మన్ (Deutsch)
Vor Männern mir großer Einsicht zu sprechen ist wie das Gießen eines Beetes mir wachsenden Pflanzen.

స్వీడిష్ (Svenska)
Att undervisa dem som redan äger insikt är som att vattna en åker vars gröda växer av sig själv.
Yngve Frykholm (Tirukkural)


లాటిన్ (Latīna)
Coram doctis dicere perinde est ac crescenti segeti aquam in- fundere. (DCCXVIII)

పోలిష్ (Polski)
Jeśli z gronem słuchaczów nawiążesz wspólnotę, Dobroczyńcą ich przez to się staniesz.
Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)


அறிவுடையார் அடையும் மகிழ்ச்சி — முல்லை பி. எல். முத்தையா (திருக்குறள் உவமைகள்)

பயிர் விளையும் வளமான நிலத்திலே, நீரை பாய்ச்சினால், நிலம் மேலும் வளம் பெற்று, நல்ல விளைச்சலைத் தரும்.

அதுபோல, பேசுகின்ற பொருள் உணர்ந்து அதைப் பாராட்ட கூடிய சிறந்த அறிவுடையோர் முன்னிலையில், தெளிவாகப் பேசினால், அது பயன்படும்.

அறிவாளிகள் அதைக்கேட்டு, ரசித்து மகிழ்வார்கள்.


உணர்வ துடையார்முன் சொல்லல் வளர்வதன் பாத்தியுள் நீர்சொரிந் தற்று.
ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்

Popular Chapter

Popular Couplet

Repeated Word in Couplets
Most repeated word in Thirukkural
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

Repeated Word in Couplet Starting
Most common First word in the Couplets
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

Repeated Word in Couplet Ending
Most common Last word in the Couplets
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22