కాలము

பகல்வெல்லும் கூகையைக் காக்கை இகல்வெல்லும்
வேந்தர்க்கு வேண்டும் பொழுது.   (௪௱௮௰௧ - 481) 

పగటివేళఁగాకి పగదీర్చు గూబపై
వేళ నృపతి కట్లు విలువ గలది.  (౪౮౧)


తమిళ (தமிழ்)
தன்னை விட வலிமையான கூகையைப் பகல் நேரத்தில் காக்கை போரிட்டு வென்றுவிடும்; அவ்வாறே பகைவரை வெல்லும் வேந்தர்க்கு தகுந்த காலம் வேண்டும் (௪௱௮௰௧)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)


காக்கை தன்னைவிட வலிய கோட்டானைப் பகலில் வென்றுவிடும், அதுபோல் பகையை வெல்லக்கருதும் அரசர்க்கும் அதற்கு ஏற்ற காலம் வேண்டும். (௪௱௮௰௧)
— மு. வரதராசன்


தன்னைவிடப் பலமுள்ள கோட்டானைக் காக்கை பகலில் வென்றுவிடும்; ஆகவே பகைவரை வெல்ல எண்ணுபவர்க்கு அதற்கு ஏற்ற காலம் அவசியம். (௪௱௮௰௧)
— சாலமன் பாப்பையா


பகல் நேரமாக இருந்தால் கோட்டானைக் காக்கைவென்று விடும் எனவே எதிரியை வீழ்த்துவதற்கு ஏற்ற காலத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும் (௪௱௮௰௧)
— மு. கருணாநிதி


బ్రాహ్మీ లిపి (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)
𑀧𑀓𑀮𑁆𑀯𑁂𑁆𑀮𑁆𑀮𑀼𑀫𑁆 𑀓𑀽𑀓𑁃𑀬𑁃𑀓𑁆 𑀓𑀸𑀓𑁆𑀓𑁃 𑀇𑀓𑀮𑁆𑀯𑁂𑁆𑀮𑁆𑀮𑀼𑀫𑁆
𑀯𑁂𑀦𑁆𑀢𑀭𑁆𑀓𑁆𑀓𑀼 𑀯𑁂𑀡𑁆𑀝𑀼𑀫𑁆 𑀧𑁄𑁆𑀵𑀼𑀢𑀼 (𑁕𑁤𑁢𑁒)
— (தமிழி / தமிழ்ப் பிராமி)


ఇంగ్లీష్ (English)
Pakalvellum Kookaiyaik Kaakkai Ikalvellum
Vendharkku Ventum Pozhudhu
— (Transliteration)


pakalvellum kūkaiyaik kākkai ikalvellum
vēntarkku vēṇṭum poḻutu.
— (Transliteration)


A crow can defeat an owl by day. Kings need the right time to win.

హిందీ (हिन्दी)
दिन में उल्लू पर विजय, पा लेता है काक ।
नृप जिगीषु को चाहिये, उचित समय की ताक ॥ (४८१)


మలయాళం (മലയാളം)
പകലിൽ കാക്കതോൽപ്പിക്കും ഭീമനായുള്ള മൂങ്ങയെ ശത്രുവെ നേരിടും രാജൻ കാലം നോക്കിയിറങ്ങണം (൪൱൮൰൧)

కన్నడ (ಕನ್ನಡ)
ಕಾಗೆಯು (ತನಗಿಂತ ಬಲಶಾಲಿಯಾದ) ಗೂಬೆಯನ್ನು ಹಗಲು ವೇಳೆ ಗೆದ್ದುಬಿಡುತ್ತದೆ. ಅದೇ ರೀತಿ ತಮ್ಮ ಶತ್ರುಗಳನ್ನು ಗೆಲ್ಲಬಯಸುವ ಅರಸರು ಸೂಕ್ತ ವೇಳೆಗಾಗಿ ಕಾಯಬೇಕು. (೪೮೧)

సంస్కృత (संस्कृतम्)
उलूको बलवानह्नि काकेनाल्पेन जीयते ।
जयैषिणस्तथा राज्ञ: काल: ख्रलु निरीक्ष्यते ॥ (४८१)


సింహళ భాష (සිංහල)
බකූසු පැරදීමට - කපුටකූට දහවල මෙන් සතූරු කම දිනනට - සුදුසු කාලය රජුට ඇවැසියි (𑇤𑇳𑇱𑇡)

(四百八十一)
程曦 (古臘箴言)మలయు (Melayu)
Bila siang menang-lah burong gagak dan kalah-lah burong hantu: demikian-lah kesempatan yang baik ada-lah maha penting bagi raja yang hendak mengalahkan musoh-nya.
Ismail Hussein (Tirukkural)


కొరియన్ (한국어)
까마귀는낮에올빼미를물리칠수있다; 마찬가지로, 왕도적을정복하기위해적절한시간이필요하다. (四百八十一)

రష్యన్ (Русский)
Ворона побеждает сову именно днем. Так и властитель должен правильно выбирать время для сокрушения своих врагов

అరబ్ (العَرَبِيَّة)
كما أن الغراب ربما يغلب على البوم فى ضوء النهار المشرق فكذلك يمكن لملك أن يغلب على عدوه إن إختار وقتا مناسبا له (٤٨١)


ఫ్రెంచ్ (Français)
Le corbeau triomphe du hibou pendant qu'il fait jour, ainsi il faut un temps opportun au Roi qui désire vaincre ses ennemis.

జర్మన్ (Deutsch)
Am Morgen besiegt die Krähe die Eule - um seine Feinde zu besiegen, bedarf der Konig der günstigen Zeit.

స్వీడిష్ (Svenska)
Om dagen är kråkan starkare än ugglan. På samma sätt behövs det lägliga tillfället för konungen som vill besegra sin fiende i strid.
Yngve Frykholm (Tirukkural)


లాటిన్ (Latīna)
Diurno tempore cornix cuculum vincet; regibus hostes victuris tcmpus ( opportunurn) ncccssarium est. (CDLXXXI)

పోలిష్ (Polski)
W ciągu dnia wrona łatwo pokona puchacza, Co rzutuje na czyny człowiecze.
Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)


சாதகமான காலம் எது? — முல்லை பி. எல். முத்தையா (திருக்குறள் உவமைகள்)

பகல் நேரத்தில் கோட்டானுக்குக் கண் தெரியாது. அதனால், கோட்டானைக் காக்கை வென்றுவிடும்.

இரவு நேரத்தில் காக்கைக்கும் கண் தெரியாது. அதனால் இரவு நேரத்தில் காக்கையை கோட்டான் வென்றுவிடும்.

கால மாறுதலால் ஒன்றை மற்றொன்று வெல்ல வாய்ப்பு ஏற்படுகிறது.

பலைவனை முறியடிக்க கருதும் அரசன் சாதகமான காலத்தை எதிர்நோக்கி காத்திருக்க வேண்டும்.

சாதகமான காலம் என்பது வெப்பமும் குளிரும் சமமாய், நோய் இல்லாமல், உணவும், தண்ணீரும் கிடைக்கும் காலம். மேலும், படை பலத்தையும் அதிகரித்துக் கொள்ள வேண்டும்.

இது அரசனுக்கு மட்டுமல்ல மக்களுக்கும் பொருந்தும்.


பகல்வெல்லும் கூகையைக் காக்கை இகல்வெல்லும் வேந்தர்க்கு வேண்டும் பொழுது.
ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்

Popular Chapter

Popular Couplet

Repeated Word in Couplets
Most repeated word in Thirukkural
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

Repeated Word in Couplet Starting
Most common First word in the Couplets
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

Repeated Word in Couplet Ending
Most common Last word in the Couplets
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22