ಕಾಲ ಪರಿಜ್ಞಾನ

பருவத்தோடு ஒட்ட ஒழுகல் திருவினைத்
தீராமை ஆர்க்குங் கயிறு.   (௪௱௮௰௨ - 482) 

ಸೂಕ್ತ ಸಮಯವರಿತು ಕಾರ್ಯಸಾಧಿಸಲು ಯತ್ನಿಸಬೇಕು; ಅದೇ ಯಶಸ್ಸು ಜಾರಿಕೊಳ್ಳದಂತೆ ಬಂಧಿಸುವ ಪಾಶವಾಗುವುದು.  (೪೮೨)

ტამილური (தமிழ்)
காலத்தோடு பொருந்த முயற்சிகளைச் செய்து வருதல், செல்வத்தைத் தம்மை விட்டுப் போகாமல் பிணித்து வைக்கும் கயிறு ஆகும் (௪௱௮௰௨)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)


காலத்தோடுப் பொருந்துமாறு ஆராய்ந்து நடத்தல் ( நில்லாத இயல்பு உடைய) செல்வத்தை நீங்காமல் நிற்குமாறு கட்டும் கயிறாகும். (௪௱௮௰௨)
— மு. வரதராசன்


காலந் தவறாமல் காரியம் ஆற்றுவது, ஓடும் செல்வத்தை ஓடாமல் கட்டும் கயிறு ஆகும். (௪௱௮௰௨)
— சாலமன் பாப்பையா


காலம் உணர்ந்து அதற்கேற்பச் செயல்படுதல், அந்த நற்செயலின் வெற்றியை நழுவவிடாமல் கட்டிப்பிணிக்கும் கயிறாக அமையும் (௪௱௮௰௨)
— மு. கருணாநிதி


ಬ್ರಾಹ್ಮೀ (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)
𑀧𑀭𑀼𑀯𑀢𑁆𑀢𑁄𑀝𑀼 𑀑𑁆𑀝𑁆𑀝 𑀑𑁆𑀵𑀼𑀓𑀮𑁆 𑀢𑀺𑀭𑀼𑀯𑀺𑀷𑁃𑀢𑁆
𑀢𑀻𑀭𑀸𑀫𑁃 𑀆𑀭𑁆𑀓𑁆𑀓𑀼𑀗𑁆 𑀓𑀬𑀺𑀶𑀼 (𑁕𑁤𑁢𑁓)
— (தமிழி / தமிழ்ப் பிராமி)


ინგლისური (English)
Paruvaththotu Otta Ozhukal Thiruvinaith
Theeraamai Aarkkung Kayiru
— (Transliteration)


paruvattōṭu oṭṭa oḻukal tiruviṉait
tīrāmai ārkkuṅ kayiṟu.
— (Transliteration)


The rope that binds Fortune Is deeds done at the right time.

ჰინდი (हिन्दी)
लगना जो है कार्य में, अवसर को पहचान ।
श्री को जाने से जकड़, रखती रस्सी जान ॥ (४८२)


ტელუგუ (తెలుగు)
అద నెఱింగి కార్య మాచరించిన జాలు
ధనము మూటగట్ట దారమదియె. (౪౮౨)


მალაიალამი (മലയാളം)
കാലത്തിന്നനുയോജ്യമായ് കാര്യങ്ങൾ നിറവേറ്റണം ധനം നീങ്ങാതെ തൻകൂടെ കെട്ടും പാശമതാണ് താൻ (൪൱൮൰൨)

ಸಂಸ್ಕೃತ (संस्कृतम्)
काले कर्म समारब्धं विचार्य च कृतं पुन: ।
अस्थिरामपि सम्पत्तिं बघ्नात्येकत्र सुस्थिराम् ॥ (४८२)


იაპონური (සිංහල)
සුදුසු කල නිසි ලෙස - කටයුතූ බලා සැලසුම් නො වැනසෙන ලෙස තම - දනය කඹයෙන් බැඳීමක් මෙනි (𑇤𑇳𑇱𑇢)

ჩინური (汉语)
把握時機而行動, 能使幸運牢縛於己身. (四百八十二)
程曦 (古臘箴言)


მალაური (Melayu)
Mengikut jejak langkahWaktu sa-dekat2-nya: itu-lah tali yang akan mengikat Dewi Tuah kapada-mu.
Ismail Hussein (Tirukkural)


ಕೊರಿಯಾದ (한국어)
적시의조치는불안정한재산을영원히함께유지하는끈이다. (四百八十二)

რუსული (Русский)
Если дела вершатся в соответствии с временем, то это представляет собой прочную нить, связывающую правителя и богиню удачи

არაბული (العَرَبِيَّة)
العمل فى وقته كحبل يوصل العامل إلى إله حسن الحظ والشروة (٤٨٢)


ფრანგული (Français)
Faire chaque chose en temps opportun est la corde qui retient chez soi. l'inconstante fortune.

გერმანული (Deutsch)
In der rechten Jahreszeit zu handeln ist die Schnur, die das Glück unverrückbar bindet.

შვედური (Svenska)
Konungens förmåga att gripa in när stunden är mest läglig är det rep som håller hans framgång fast.
Yngve Frykholm (Tirukkural)


ლათინური (Latīna)
I'empori se accommodantem agcre funis est, qui felicitatem devinciat. (CDLXXXII)

პოლონური (Polski)
Król pociąga sznur losów i porę wyznacza, Kiedy mają skrzyżować się miecze.
Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)


செல்வத்தைக் கட்டிவைக்கும் கயிறு — முல்லை பி. எல். முத்தையா (திருக்குறள் உவமைகள்)

காலநிலையை அனுசரித்து, எதை செய்ய வேண்டுமோ? அதை செய்ய வேண்டும்.

இளமை காலத்தில் செய்ய வேண்டுவது வேறு முதுமைக் காலத்தில் செய்ய வேண்டுவது வேறு.

எப்படி என்றால், இளமையில் கல்வி கற்பது பாலியத்தில் உத்தியோகம் பார்ப்பது அல்லது வியாபாரம் செய்து பணம் சம்பாதிப்பது, இல்வாழ்க்கை இன்பம் நுகர்வது; முதுமையில் ஓய்வு பெறுவது அல்லது துறவு நிலை அடைவது.

இவ்வாறு வாழ்க்கையை சீராக அமைத்துக் கொண்டால், செல்வம் சிதறிப் போகாமல் சேர்ந்து கெட்டியாக கட்டி வைக்க உதவும் கயிறு போன்றது.


பருவத்தோடு ஒட்ட ஒழுகல் திருவினைத் தீராமை ஆர்க்குங் கயிறு.
ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்

Popular Chapter

Popular Couplet

Repeated Word in Couplets
Most repeated word in Thirukkural
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

Repeated Word in Couplet Starting
Most common First word in the Couplets
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

Repeated Word in Couplet Ending
Most common Last word in the Couplets
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22