ಮಕ್ಕಳನ್ನು ಪಡೆಯುವಿಕೆ

அமிழ்தினும் ஆற்ற இனிதேதம் மக்கள்
சிறுகை அளாவிய கூழ்.   (௬௰௪ - 64) 

ಮಕ್ಕಳು ತಮ್ಮ ಕಿರುಕೈಗಳಿಂದ ಚೆಲ್ಲಾಡಿದ ಕೂಳು, ಹೆತ್ತವರಿಗೆ ಅಮೃತಕ್ಕಿಂತ ಮಿಗಿಲಾದ ಸವಿ ಉಂಟುಮಾಡುತ್ತದೆ.  (೬೪)

ტამილური (தமிழ்)
தம்முடைய மக்களின் சின்னஞ்சிறு கைகளாலே அளாவப் பெற்றது, மிகவும் எளிமையுடைய கூழேயானாலும், அது பெற்றோருக்கு அமிழ்தினும் இனிமையானதாயிருக்கும் (௬௰௪)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)


தம்முடைய மக்களின் சிறு கைகளால் அளாவப்பெற்ற உணவு, பெற்றோர்க்கு அமிழ்தத்தை விட மிக்க இனிமை உடையதாகும். (௬௰௪)
— மு. வரதராசன்


தம் பிள்ளைகளின் சிறு கையால் பிசையப்பட்ட கூழ், அமிழ்தைக் காட்டிலும் மிக இனிது. (௬௰௪)
— சாலமன் பாப்பையா


சிறந்த பொருளை அமிழ்தம் எனக் குறிப்பிட்டாலுங்கூடத் தம்முடைய குழந்தைகளின் பிஞ்சுக்கரத்தால் அளாவப்பட்ட கூழ் அந்த அமிழ்தத்தைவிடச் சுவையானதாகிவிடுகிறது (௬௰௪)
— மு. கருணாநிதி


ಬ್ರಾಹ್ಮೀ (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)
𑀅𑀫𑀺𑀵𑁆𑀢𑀺𑀷𑀼𑀫𑁆 𑀆𑀶𑁆𑀶 𑀇𑀷𑀺𑀢𑁂𑀢𑀫𑁆 𑀫𑀓𑁆𑀓𑀴𑁆
𑀘𑀺𑀶𑀼𑀓𑁃 𑀅𑀴𑀸𑀯𑀺𑀬 𑀓𑀽𑀵𑁆 (𑁠𑁕)
— (தமிழி / தமிழ்ப் பிராமி)


ინგლისური (English)
Amizhdhinum Aatra Inidhedham Makkal
Sirukai Alaaviya Koozh
— (Transliteration)


amiḻtiṉum āṟṟa iṉitētam makkaḷ
ciṟukai aḷāviya kūḻ.
— (Transliteration)


Sweeter than nectar is the porridge messed up By the tiny hands of one’s children.

ჰინდი (हिन्दी)
नन्हे निज संतान के, हाथ विलोड़ा भात ।
देवों के भी अमृत का, स्वाद करेगा मात ॥ (६४)


ტელუგუ (తెలుగు)
కన్నబిడ్డ తనదు చిన్నారి చేతులఁ
దులుపు కూడె యమృత తుల్యమగును. (౬౪)


მალაიალამი (മലയാളം)
സ്വന്തം കുഞ്ഞിൻ കരത്താലേ കലമ്പിച്ചേർത്ത ഭക്ഷണം പിതാവിൻ ജിഹ്വയിൽ തീർത്തും പീയൂഷം പോൽ രുചിപ്രദം (൬൰൪)

ಸಂಸ್ಕೃತ (संस्कृतम्)
दत्तं यत् पुत्र हस्तेन सामान्यमपि भोजनम् ।
अमृतादधिकं तत्तु वर्तते मधुरं पितु: ॥ (६४)


იაპონური (සිංහල)
තම දරුවන් අනා - මිරිකූණු සිඟිති අත්ලෙන් කෑම දෙගූරුන්හට - අමාවට වැඩි මිහිර ගෙන දේ (𑇯𑇤)

ჩინური (汉语)
子女親手奉獻之粗茶淡飯, 其味較之仙藥爲甘. (六十四)
程曦 (古臘箴言)


მალაური (Melayu)
Bubor yang di-gaul dan di-kechahkan oleh tangan lembut anak sendiri ada-lah sa-sunggoh-nyalebeh manis daripada makanan dewa2.
Ismail Hussein (Tirukkural)


ಕೊರಿಯಾದ (한국어)
자녀의 작은 손이 엉망로 만든 음식은 신성한 꿀보다 더 달콤하다. (六十四)

რუსული (Русский)
Разве можно сравнить сладость нектара, дающего бессмертие, с рисовой кашей, которой коснулась шаловливая ручонка твоего дитяти?

არაბული (العَرَبِيَّة)
الطعام الذى لعبت به أيدى الصغار من الأولاد هو أحلى من القربان للآلهة (٦٤)


ფრანგული (Français)
La bouillie préparée par leurs petites mains est plus délicieuse que l’ambroisie.

გერმანული (Deutsch)
Süßer als Nektar ist der Brei, in dem das Kind mit seinen Händchen gespielt hat.

შვედური (Svenska)
Långt ljuvare är gudars föda är den grynvälling som kladdas runt av egna barns små händer.
Yngve Frykholm (Tirukkural)


ლათინური (Latīna)
Cibus proprii filioli manicula pertractatus (parenti) multo dulcior est nectare. (LXIV)

პოლონური (Polski)
Nawet mleko dziecięcą rączyną dotknięte Jest dla ojca niebiańskim pokarmem.
Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)


கூழும் அமுதமும் — முல்லை பி. எல். முத்தையா (திருக்குறள் உவமைகள்)

கணவன்- மனைவிக்கு, குழந்தைகள் மிகப்பெரிய செல்வம். நீளம், வீடு, பணம், பதவி, புகழ் எல்லாம் இருந்தும், குழந்தைகள் இல்லையானால் என்ன பயன்?

பெற்றோர் உணவு உண்ணும்பொழுது, உடன் இருக்கின்ற தங்கள் குழந்தை, தன் பிஞ்சு விரலால், உணவை கூழ்போல் குழப்பி, அவர்களிடம் கொடுத்தால் அது அமுதத்தை விட மேலாக இருக்கும்.

("வயதான காலத்தில் கஷ்டப்படும்பொழுது, தங்கள் பிள்ளைகள் சம்பாதித்து கூழோ அல்லது கஞ்சியோ, பெற்றோர்களுக்கு அளித்தால் அது அவர்களுக்கு அமுதத்தை காட்டிலும் இனிமையாக இருக்கும்" என்று கருதினால் அதுவும் பொருந்தலாம்.)


அமிழ்தினும் ஆற்ற இனிதேதம் மக்கள் சிறுகை அளாவிய கூழ்.
ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்

Popular Chapter

Popular Couplet

Repeated Word in Couplets
Most repeated word in Thirukkural
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

Repeated Word in Couplet Starting
Most common First word in the Couplets
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

Repeated Word in Couplet Ending
Most common Last word in the Couplets
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22