Menahan diri daripada minuman keras

துஞ்சினார் செத்தாரின் வேறல்லர் எஞ்ஞான்றும்
நஞ்சுண்பார் கள்ளுண் பவர்.   (௯௱௨௰௬ - 926) 

Perhatikan-lah mereka yang meminumi rachun yang di-namakan tuak dari hari ka-hari: mereka saperti orang yang tidor nyenyak yang tidak berbedza dengan orang mati.
Ismail Hussein (Tirukkural)


Tamil (தமிழ்)
உறங்கினவர், அறிவிழந்திருப்பதால் செத்தாரினும் வேறானவர் அல்லர்; அவ்வாறே கள்ளுண்பவரும் எப்போதும் நஞ்சு உண்டவரின் வேறானவர் அல்லர் (௯௱௨௰௬)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)


உறங்கினவர் இறந்தவரை விட வேறுபட்டவர் அல்லர், அவ்வாறே கள்ளுண்பவரும் அறிவுமயங்குதலால் நஞ்சு உண்பவரே ஆவர். (௯௱௨௰௬)
— மு. வரதராசன்


உறங்குபவர், இறந்துபோனவரிலும் வேறுபட்டவர் அல்லர்; அதுபோலவே, எப்போதும் போதைப் பொருளைப் பயன்படுத்துபவர் நஞ்சு உண்பவரிலும் வேறுபட்டவர் அல்லர். (௯௱௨௰௬)
— சாலமன் பாப்பையா


மது அருந்துவோர்க்கும் நஞ்சு அருந்துவோர்க்கும் வேறுபாடு கிடையாது என்பதால் அவர்கள் தூங்குவதற்கும் இறந்து கிடப்பதற்கும்கூட வேறுபாடு கிடையாது என்று கூறலாம் (௯௱௨௰௬)
— மு. கருணாநிதி


Brāhmī (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)
𑀢𑀼𑀜𑁆𑀘𑀺𑀷𑀸𑀭𑁆 𑀘𑁂𑁆𑀢𑁆𑀢𑀸𑀭𑀺𑀷𑁆 𑀯𑁂𑀶𑀮𑁆𑀮𑀭𑁆 𑀏𑁆𑀜𑁆𑀜𑀸𑀷𑁆𑀶𑀼𑀫𑁆
𑀦𑀜𑁆𑀘𑀼𑀡𑁆𑀧𑀸𑀭𑁆 𑀓𑀴𑁆𑀴𑀼𑀡𑁆 𑀧𑀯𑀭𑁆 (𑁚𑁤𑁜𑁗)
— (தமிழி / தமிழ்ப் பிராமி)


Inggeris (English)
Thunjinaar Seththaarin Verallar Egngnaandrum
Nanjunpaar Kallun Pavar
— (Transliteration)


tuñciṉār cettāriṉ vēṟallar eññāṉṟum
nañcuṇpār kaḷḷuṇ pavar.
— (Transliteration)


Slumbers are no different from the dead. Nor alcoholics from consumers of poison.

Hindi (हिन्दी)
सोते जन तो मृतक से, होते हैं नहिं भिन्न ।
विष पीते जन से सदा, मद्यप रहे अभिन्न ॥ (९२६)


Telugu (తెలుగు)
నిద్ర, చావువాని నియమమ్ము సమమౌను
విషము మదువు రెంటి విధము నట్లె. (౯౨౬)


Malayalam (മലയാളം)
മൃത്യുവും നിദ്രയും ബോധമിന്മയാലേകരൂപമാം മദ്യവും വിഷവും രണ്ടാണെങ്കിലും ഫലമേകമാം (൯൱൨൰൬)

Kannada (ಕನ್ನಡ)
ಕಳ್ಳಿನ ಅಮಲಿನಲ್ಲಿ ಮೈಮರೆತು ಮಲಗಿದವರು ಸತ್ತವರಿಗಿಂತ ಬೇರೆ ಅಲ್ಲ; ಕಳ್ಳು ಕುಡಿದವರು ನಂಜುಣ್ಣುವವರೆ ಆಗುತ್ತಾರೆ. (೯೨೬)

Sanskrit (संस्कृतम्)
ज्ञानाभावान्न भेदोऽस्ति निद्राणस्य मृतस्य च ।
विषपायी सुरापायी द्वामिवौ च तथा समौ ॥ (९२६)


Sinhala (සිංහල)
නින්දෙහි වැද සිටින - අය මළවුනට සම වෙත් එ පරිදි ම රා බොන - දන ද වස බොන්න නට සම වෙත් (𑇩𑇳𑇫𑇦)

Cina (汉语)
貪睡不異於死; 飲酒不異服毒. (九百二十六)
程曦 (古臘箴言)


Korea (한국어)
잠든자는죽은자와다르지않다.술고래는음독자와같다. (九百二十六)

Rusia (Русский)
Пьющие вино пьют яд. Пребывая в бесчувствии,,ни подобны мертвецам

Arab (العَرَبِيَّة)
إن الرجال الذين يشربون الســم الذى يقال لــه " تازى " مرة بعد مرة ليسوا إلا كمثل من هم راقدون وميتون فلا فرق بينهم وبين الميتين (٩٢٦)


Perancis (Français)
Ceux qui dorment ne sont autres que les morts; de même ceux qui boivent de l'alcool ne sont autres que ceux qui absorbent du poison.

Jerman (Deutsch)
Wer schläft, ist wie ein Toter - wer Alkohol trinkt, ist jedes Mal ein Giftesser.

Sweden (Svenska)
De sovande och de döda är varandra lika. De som ständigt dricker palmvin liknar dem som har druckit gift.
Yngve Frykholm (Tirukkural)


Latin (Latīna)
Dormicntes mortuis non sunt dissimiles. lnebriantia bibentes omni tempore venenum bibunt, (CMXXVI)

Poland (Polski)
Ciało znieruchomiałe jest na kształt padliny, Którą winem przemyślnie zatruto.
Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)


மது, விஷம், தூக்கம் — முல்லை பி. எல். முத்தையா (திருக்குறள் உவமைகள்)

தன்னை மறந்து தூங்குபவன் செத்தவனைப் போல காணப்படுவான்.

செத்தவனுக்கும் தூங்கபவனுக்கும் அதிக வேறுபாடு இல்லை.

அதுபோல, மயக்கம் தரும் கள்ளைக் குடிப்பவனும், நஞ்சு உண்டவனைப் போன்றவனே. ஆண்டவன் உடனே இறந்து விடுகிறான். ஆனால், கள்ளை குடிப்பவன் சிறுகச்சிறுக இறக்கிறான்.

இருவருக்கும் தன்னை மறந்த மறதி நிலை ஒன்றே. தூங்கினவனும், செத்தவனும் மறதி நிலையால் ஒரே மாதிரிதான். கள்ளைக் குடித்தவனுக்கும் நஞ்சு உண்டவனுக்கும் மயக்க நிலை ஒரே மாதிரியானதே.

தூங்கினவன் பிறகு விழித்து எழுவதை போல், கள் குடித்தவனும் பிறகு பிழைத்துவிடுகிறான்.

இருவருக்கும் அவ்வளவுதான் வேறுபாடு.


துஞ்சினார் செத்தாரின் வேறல்லர் எஞ்ஞான்றும் நஞ்சுண்பார் கள்ளுண் பவர்.
ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்

Bab Terkenal

Petikan Terkenal

Perkataan ulangan dalam petikan
Perkataan ulangan paling banyak dalam Thirukkural
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

Perkataan ulangan dalan permulaan petikan
Perkataan pertama paling lazim dalam petikan
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

Perkataan ulangan dalan keakhiran petikan
Perkataan terakhir paling lazim dalam petikan
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22