කේලාම් නො කීම

அறங்கூறா னல்ல செயினும் ஒருவன்
புறங்கூறா னென்றல் இனிது   (௱௮௰௧ - 181)
 

දැහැමි බස් මුවගින්- නො දොඩා කළත් අදහම් කේලාම් නො කියන - උසස් ගූණයම ඉතා යහපති (𑇳𑇱𑇡)

அறனழீஇ அல்லவை செய்தலின் தீதே
புறனழீஇப் பொய்த்து நகை.   (௱௮௰௨ - 182)
 

මුහුණට සිනාවත්- නැති තැන අගූණ කීමත් අදහම් කිරිමට - වඩා නපුරුයි දහම් වනසා (𑇳𑇱𑇢)

புறங்கூறிப் பொய்த்துயிர் வாழ்தலின் சாதல்
அறங்கூற்றும் ஆக்கத் தரும்.   (௱௮௰௩ - 183)
 

කේලාම් කීමෙන් - පණ රැකූමටත් වැඩියෙන් මරණයම යහපති- දහම් පල ඉන් ලබත හැකි වේ (𑇳𑇱𑇣)

கண்ணின்று கண்ணறச் சொல்லினும் சொல்லற்க
முன்னின்று பின்நோக்காச் சொல்.   (௱௮௰௪ - 184)
 

මුහුණට මුහුණ දී - නපුරු වදනින් දෙඩුවත් පසුව නො ලැබිය හැකි- වචන නො කියන් නැති තැනෙකදි (𑇳𑇱𑇤)

அறஞ்சொல்லும் நெஞ்சத்தான் அன்மை புறஞ்சொல்லும்
புன்மையாற் காணப் படும்.   (௱௮௰௫ - 185)
 

දහම ම මුවෙහි ඇත- නමුත් සිත ඉන් හිස් නම් එය දිසේ හැමවිට - කේලාම නම් පහත් වදනින් (𑇳𑇱𑇥)

பிறன்பழி கூறுவான் தன்பழி யுள்ளும்
திறன்தெரிந்து கூறப் படும்.   (௱௮௰௬ - 186)
 

පරහට නිගාවන්- කියන අයගේ ඇති වූ ඉතා තද නින්දා - සොයා තෝරා පිටත කියැ වේ (𑇳𑇱𑇦)

பகச்சொல்லிக் கேளிர்ப் பிரிப்பர் நகச்சொல்லி
நட்பாடல் தேற்றா தவர்.   (௱௮௰௭ - 187)
 

බිඳුවන බස් කියා- වෙන් කරති නෑදෑයින් සිනාවෙන් මතූ දම්- පවත්වන්නට නොදත් ඇත්තෝ (𑇳𑇱𑇧)

துன்னியார் குற்றமும் தூற்றும் மரபினார்
என்னைகொல் ஏதிலார் மாட்டு.   (௱௮௰௮ - 188)
 

හිතවතූන් වරදත් - පතූරන සොබා ඇති දන සතූරනට හැම විට - කවර වරදක් නොම කරාවි ද ? (𑇳𑇱𑇨)

அறன்நோக்கி ஆற்றுங்கொல் வையம் புறன்நோக்கிப்
புன்சொல் உரைப்பான் பொறை.   (௱௮௰௯ - 189)
 

කේලම් කියනවුන්- මේ පොළෙව උසුලනුයේ අනිකක් නිසා නොව - ලෝක දහමක් වූ නිසාම ය (𑇳𑇱𑇩)

ஏதிலார் குற்றம்போல் தங்குற்றங் காண்கிற்பின்
தீதுண்டோ மன்னும் உயிர்க்கு.   (௱௯௰ - 190)
 

සතූරන් වරද මෙන්- තම සතූ වැරදි දුටුවොත් ලෝවැසි දනන්හට- කේලමින් වන වරද වේවි ද ? (𑇳𑇲)

பு. ஆ. முத்துக்கிருஷ்ணன் (திருக்குறள் இசைமலர்)

Raga: சக்கரவாகம்  |  Tala: ரூபகம்
கண்ணிகள்:
கண்டொன்று பேசாதே - பிறரைக்
காணாமல் ஏசாதே
கொண்ட கருத்தினை இரண்டு துண்டாக்குதல்
குணமில்லாச் செய்கையன்றோ

முன்னால் புகழாதே - அவரைப்
பின்னால் இகழாதே
"கண்ணின்று கண்ணறச் சொல்லினும் சொல்லற்க
முன்னின்று பின்னோக்காச் சொல்"

புறங்கூறும் பொய்யொழுக்கம் - கொண்டு
பூமியில் வாழ்தலினும்
அறங்கூறும் வழிசென்று வறுமையில் மாய்வதே
அவனியில் நன்மதிப்பாம்

உள்ளம் திறந்து சொல்வாய் - என்றும்
உண்மைச் சுடர் விரிவாய்
தெள்ளமுதாகும் நம் செந்தமிழின் குறள்
தேர்ந்து நலம் பெறுவாய்




ජනප්‍රිය පරිච්ඡේදය

ජනප්‍රිය දෙපදය

දෙපද වල නැවත භාවිතා වන වචනය
වැඩි වශයෙන්ම නැවත භාවිතා වන වචනය
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

දෙපද ආරම්භයේදී නැවත භාවිතා වන වචනය
දෙපද වල බහුලම පළමු වචනය
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

දෙපද අවසානයේදී නැවත භාවිතා වන වචනය
දෙපද වල බහුලම අවසාන වචනය
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22