Tyranni

வேலொடு நின்றான் இடுவென் றதுபோலும்
கோலொடு நின்றான் இரவு.   (௫௱௫௰௨ - 552)
 

Den konung som begär pengar är lik en rövare som med vapen i handen säger: ”Ge hit!”
Yngve Frykholm (Tirukkural)

நாடொறும் நாடி முறைசெய்யா மன்னவன்
நாடொறும் நாடு கெடும்.   (௫௱௫௰௩ - 553)
 

Den konung som icke dagligen granskar oförrätter och skipar rättvisa, hans rike går under dag för dag.
Yngve Frykholm (Tirukkural)

அல்லற்பட்டு ஆற்றாது அழுதகண் ணீரன்றே
செல்வத்தைத் தேய்க்கும் படை.   (௫௱௫௰௫ - 555)
 

De förtrycktas tröstlösa gråt är det vapen, inte sant, som nöter bort konungens gods och ära.
Yngve Frykholm (Tirukkural)

மன்னர்க்கு மன்னுதல் செங்கோன்மை அஃதின்றேல்
மன்னாவாம் மன்னர்க் கொளி.   (௫௱௫௰௬ - 556)
 

En god styrelse länder konungen till bestående ära. Där så ej sker blir konungens glans av kort varaktighet.
Yngve Frykholm (Tirukkural)

இன்மையின் இன்னாது உடைமை முறைசெய்யா
மன்னவன் கோற்கீழ்ப் படின்.   (௫௱௫௰௮ - 558)
 

Värre än fattigdom är att äga något i det land som har fallit under en orättfärdig konungs spira.
Yngve Frykholm (Tirukkural)

முறைகோடி மன்னவன் செய்யின் உறைகோடி
ஒல்லாது வானம் பெயல்.   (௫௱௫௰௯ - 559)
 

Om konungen gör vad orätt är förmår ej himlen ge regn under rätt årstid.
Yngve Frykholm (Tirukkural)

ஆபயன் குன்றும் அறுதொழிலோர் நூல்மறப்பர்
காவலன் காவான் எனின்.   (௫௱௬௰ - 560)
 

Korna ger ej mjölk, prästerna glömmer sina skrifter om Väktaren ej vakar över landet.
Yngve Frykholm (Tirukkural)

பு. ஆ. முத்துக்கிருஷ்ணன் (திருக்குறள் இசைமலர்)

Raga: சுருட்டி  |  Tala: ஆதி
பல்லவி:
கொடுங்கோன்மை வேண்டாம் ஐயா - என்றும்
குடிகளைத் தாங்கும் முறை
கற்றதே இல்லையா

அநுபல்லவி:
கொடுங் கோன்மை செங் கோன்மையின்
எதிராகும் அல்லவோ
கடும்புலி வாழும் காட்டுப்
புதர் என்பதும் சொல்லவோ

சரணம்:
வேலொடு நின்றன் இடு வென்றது போலும்
கோலொடு நின்றான் கொடும் இரவதனாலும்
பாலொடு மழையின்றிப் பண்ணைகள் தீயும்
நூலொடு தொழில் எல்லாம் நொந்துயிர் மாயும்

அல்லற் பட்டாற்றாது அழுத கண்ணீரன்றே
செல்வத்தைத் தேய்க்கும் படையாய் வரும் திரண்டே
அல்லவை நீக்கி மக்களாட்சியைக் காண்பீர் இன்றே
அறிவுறும் திருக்குறள் அன்பு வழியில் நின்றே




Populärt kapitel

Populär kuplett

Upprepat ord i kupletter
Mest upprepade ord i Thirukkural
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

Upprepat ord i början av kuplett
Vanligaste begynnelseord i kupletterna
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

Upprepat ord i slutet av kuplett
Upprepat ord i slutet av kuplett
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22