Att icke tala tomma ord

நயனிலன் என்பது சொல்லும் பயனில
பாரித் துரைக்கும் உரை.   (௱௯௰௩ - 193)
 

Själva det fåfängliga tal som man sprider vitt omkring sig vittnar om att man är en nolla.
Yngve Frykholm (Tirukkural)

நயன்சாரா நன்மையின் நீக்கும் பயன்சாராப்
பண்பில்சொல் பல்லா ரகத்து.   (௱௯௰௪ - 194)
 

De meningslösa ord som man pratar inför alla och envar är fjärran från all dygd och skiljer från allt gott.
Yngve Frykholm (Tirukkural)

சீர்மை சிறப்பொடு நீங்கும் பயனில
நீர்மை யுடையார் சொலின்.   (௱௯௰௫ - 195)
 

Tillspillo går även de bästas glans och ära om de förfaller till fåfängligt tal.
Yngve Frykholm (Tirukkural)

பயனில்சொல் பராட்டு வானை மகன்எனல்
மக்கட் பதடி யெனல்.   (௱௯௰௬ - 196)
 

Den som stoltserar med tomma ord må ej kallas människa utan avskum bland människor. 
Yngve Frykholm (Tirukkural)

நயனில சொல்லினுஞ் சொல்லுக சான்றோர்
பயனில சொல்லாமை நன்று.   (௱௯௰௭ - 197)
 

Må de visa tilläventyrs tala onda ord - blott de ej sänker sig till meningslöst prat.
Yngve Frykholm (Tirukkural)

அரும்பயன் ஆயும் அறிவினார் சொல்லார்
பெரும்பயன் இல்லாத சொல்.   (௱௯௰௮ - 198)
 

De visa som har lärt sig söka det högsta goda förfaller ej till att tala onyttiga ord.
Yngve Frykholm (Tirukkural)

சொல்லுக சொல்லிற் பயனுடைய சொல்லற்க
சொல்லிற் பயனிலாச் சொல்.   (௨௱ - 200)
 

Bland alla ord må man tala de nyttiga. Bland alla ord må man undvika de meningslösa.
Yngve Frykholm (Tirukkural)

பு. ஆ. முத்துக்கிருஷ்ணன் (திருக்குறள் இசைமலர்)

Raga: விசாரத்  |  Tala: ரூபகம்
கண்ணிகள்:
பயனற்றச் சொல்லைச் சொல்லாதே - நீ
பதடி என்னும் பழி ஏற்றுக்கொள்ளாதோ
நயனற்ற தாயினும் பொன்னே - என
நவில்கின்ற சொற்களில் பயன் காண்பாய் முன்னே

பயனில்ல பல்லார்முன் சொல்லல் - என்றும்
நயனில்ல நாட்டார்கண் செய்தலின் அல்லல்
நயன்சாரா நன்மையின் நீக்கும் - மேலும்
பயன்சாராப் பண்பில் சொல் பழிபல ஏற்கும்

சீர்மை சிறப்பொடு நீங்கும் - இதை
நீர்மையுள்ளோர் சொலின் நேர்மை பின்வாங்கும்
கூர்மதி கொண்டிதைக் காண்க - சான்றோர்
கொள்ளத் தகுந்தசொல் குறைவறப் பூண்க

பூ விளங்கும் மாலைபோல - செழும்
பொன் கொண்டிழைத்திட்ட நன் மணிபோல
நாவிளங்கும் சொற்கள் கோவை - தினம்
நாடிப்பயில்க நீ திருக்குறட்பாவை




Populärt kapitel

Populär kuplett

Upprepat ord i kupletter
Mest upprepade ord i Thirukkural
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

Upprepat ord i början av kuplett
Vanligaste begynnelseord i kupletterna
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

Upprepat ord i slutet av kuplett
Upprepat ord i slutet av kuplett
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22