சகல உயிர்களும் இன்பங்களை துய்ப்பதற்காக, உடலை விரும்புகின்றன. அதனால் உயிர்களுக்கு எல்லாம் உடம்பில் இருப்பிடமாக அமைந்துள்ளன. எனவே, உயிர் நிலைத்திருந்திருந்து இன்பத்தை அனுபவிப்பதற்கு உடல் மிகவும் அவசியம்.
அதுபோல, சான்றோர் நல்ல குணங்கள் யாவும் பெற்றிருந்த போதிலும் சால்பு என்னும் பண்பானது நாணம் என்னும் சிறப்பு குணத்தால் நிலைத்திருக்கிறது.
பிறர் பழிகூறக்கூடிய செயலைக் கண்டு பயப்படாவிட்டால், இதர நல்ல குணங்கள் யாவும், பயனில்லாமல் போகும். ஆகவே, பண்பு நிலைப்பதற்கு நாணம் அவசியமாகிறது.
தகாதன செய்ய நாணுகின்ற தன்மை இயல்பாக அமைய வேண்டும்.
நானும் இரண்டு வகை ஒன்று உடல், உள்ளம், சொல் ஆகியவை அடங்கி இருப்பதால் வருகின்ற நாணம். இது பெண்களுக்கு இயல்பாக வரக்கூடியது.
மற்றொன்று; நல்லவர்கள் தகாத செயல், செய்ய முடியாதபடி தடுக்கக்கூடிய நாணம். இது பொது வாழ்வில் கடைபிடிக்க வேண்டிய நாணம். இதுவே சிறப்பு தருவது.