अशिक्षा

அரங்கின்றி வட்டாடி யற்றே நிரம்பிய
நூலின்றிக் கோட்டி கொளல்.   (௪௱௧ - 401)
 

सभा-मध्य यों बोलना, बिना पढ़े सदग्रन्थ ।
है पासे का खेल ज्यों, बिन चौसर का बंध ॥ (४०१)

கல்லாதான் சொற்கா முறுதல் முலையிரண்டும்
இல்லாதாள் பெண்காமுற் றற்று.   (௪௱௨ - 402)
 

यों है अपढ़ मनुष्य की, भाषण-पटुता-चाह ।
ज्यों दोनों कुचरहित की, स्त्रीत्व-भोग की चाह ॥ (४०२)

கல்லா தவரும் நனிநல்லர் கற்றார்முன்
சொல்லா திருக்கப் பெறின்.   (௪௱௩ - 403)
 

अपढ़ लोग भी मानिये, उत्तम गुण का भौन ।
विद्वानों के सामने, यदि साधेंगे मौन ॥ (४०३)

கல்லாதான் ஒட்பம் கழியநன் றாயினும்
கொள்ளார் அறிவுடை யார்.   (௪௱௪ - 404)
 

बहुत श्रेष्ठ ही क्यों न हो, कभी मूर्ख का ज्ञान ।
विद्वज्जन का तो उसे, नहीं मिलेगा मान ॥ (४०४)

கல்லா ஒருவன் தகைமை தலைப்பெய்து
சொல்லாடச் சோர்வு படும்.   (௪௱௫ - 405)
 

माने यदि कोई अपढ़, बुद्धिमान ही आप ।
मिटे भाव वह जब करें, बुध से वार्त्तालाप ॥ (४०५)

உளரென்னும் மாத்திரையர் அல்லால் பயவாக்
களரனையர் கல்லா தவர்.   (௪௱௬ - 406)
 

जीवित मात्र रहा अपढ़, और न कुछ वह, जान ।
उत्पादक जो ना रही, ऊसर भूमि समान ॥ (४०६)

நுண்மாண் நுழைபுலம் இல்லான் எழில்நலம்
மண்மாண் புனைபாவை யற்று.   (௪௱௭ - 407)
 

सूक्ष्म बुद्धि जिसकी नहीं, प्रतिभा नहीं अनूप ।
मिट्टी की सुठि मूर्ति सम, उसका खिलता रूप ॥ (४०७)

நல்லார்கண் பட்ட வறுமையின் இன்னாதே
கல்லார்கண் பட்ட திரு.   (௪௱௮ - 408)
 

शिक्षित के दारिद्रय से, करती अधिक विपत्ति ।
मूर्ख जनों के पास जो, जमी हुई संपत्ति ॥ (४०८)

மேற்பிறந்தா ராயினும் கல்லாதார் கீழ்ப்பிறந்தும்
கற்றார் அனைத்திலர் பாடு.   (௪௱௯ - 409)
 

उच्छ जाति का क्यों न हो, तो भी अपढ़ अजान ।
नीच किन्तु शिक्षित सदृश, पाता नहिं सम्मान ॥ (४०९)

விலங்கொடு மக்கள் அனையர் இலங்குநூல்
கற்றாரோடு ஏனை யவர்.   (௪௱௰ - 410)
 

नर से पशु की जो रहा, तुलना में अति भेद ।
अध्येत सद्‍ग्रन्थ के, तथा अपढ़ में भेद ॥ (४१०)

பு. ஆ. முத்துக்கிருஷ்ணன் (திருக்குறள் இசைமலர்)

Raga: தேவமனோகரி  |  Tala: ரூபகம்
பல்லவி:
மண் பொம்மை இதனைப் பாரம்மா - பெயர்
வள்ளுவர்தான் கூறினாரம்மா

அநுபல்லவி:
மண் பொம்மை இதுவும் ஒரு
மனிதனின் பொம்மை
மதி பெறவே கடையில் வைத்தக்
கல்லாமைப் பொம்மை

சரணம்:
விலங்கொடு மக்கள் அனையர் என்று விளக்கமும் கூறும்
விளையாத களர் நிலமாய் விழிகளை மூடும்
அலங்காரம் செய்திட்டாலும் அரங்கின்றி ஆடும்
அறிவுடையார் வரவு கண்டால் அப்பாலே ஓடும்

கல்லாதவன் ஒட்பம் சொல்லிக் கழிய நல்ல தாயினும்
கொள்ளார் அறிவுள்ளார் அது எது கொடுத்த போதிலும்
சொல்லாமல் இருக்கப் பெற்றால் கற்றவர் மின்னே
கல்லாரும் நனி நல்லர் கருத்துரை என்னே!
Popular Chapter

Popular Couplet

Repeated Word in Couplets
Most repeated word in Thirukkural
 1. படும் - 42
 2. தரும் - 37
 3. இல் - 32
 4. கெடும் - 28
 5. இல்லை - 22

Repeated Word in Couplet Starting
Most common First word in the Couplets
 1. ஆற்றின் - 5
 2. இன்பம் - 5
 3. நனவினால் - 5
 4. காமம் - 4
 5. காமக் - 4

Repeated Word in Couplet Ending
Most common Last word in the Couplets
 1. படும் - 42
 2. தரும் - 37
 3. இல் - 32
 4. கெடும் - 28
 5. செயல் - 22