पाप- भीरुता

தீவினையார் அஞ்சார் விழுமியார் அஞ்சுவர்
தீவினை என்னும் செருக்கு.   (௨௱௧ - 201)
 

पाप-कर्म के मोह से, डरें न पापी लोग ।
उससे डरते हैं वही, पुण्य-पुरुष जो लोग ॥ (२०१)

தீயவை தீய பயத்தலால் தீயவை
தீயினும் அஞ்சப் படும்.   (௨௱௨ - 202)
 

पाप- कर्म दुखजनक हैं, यह है उनकी रीत ।
पावक से भीषण समझ, सो होना भयभीत ॥ (२०२)

அறிவினுள் எல்லாந் தலையென்ப தீய
செறுவார்க்கும் செய்யா விடல்.   (௨௱௩ - 203)
 

श्रेष्ठ बुद्धिमत्ता कहें, करके सुधी विचार ।
अपने रिपु का भी कभी, नहिं करना अपकार ॥ (२०३)

மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறஞ்சூழம் சூழ்ந்தவன் கேடு.   (௨௱௪ - 204)
 

विस्मृति से भी नर नहीं, सोचे पर की हानि ।
यदि सोचे तो धर्म भी, सोचे उसकी हानि ॥ (२०४)

இலன்என்று தீயவை செய்யற்க செய்யின்
இலனாகும் மற்றும் பெயர்த்து.   (௨௱௫ - 205)
 

‘निर्धन हूँ मैं’, यों समझ, करे न कोई पाप ।
अगर किया तो फिर मिले, निर्धनता-अभिशाप ॥ (२०५)

தீப்பால தான்பிறர்கண் செய்யற்க நோய்ப்பால
தன்னை அடல்வேண்டா தான்.   (௨௱௬ - 206)
 

दुख से यदि दुष्कर्म के, बचने की है राय ।
अन्यों के प्रति दुष्टता, कभी नहीं की जाय ॥ (२०६)

எனைப்பகை யுற்றாரும் உய்வர் வினைப்பகை
வீயாது பின்சென்று அடும்.   (௨௱௭ - 207)
 

अति भयकारी शत्रु से, संभव है बच जाय ।
पाप-कर्म की शत्रुता, पीछा किये सताय ॥ (२०७)

தீயவை செய்தார் கெடுதல் நிழல்தன்னை
வீயாது அஇஉறைந் தற்று.   (௨௱௮ - 208)
 

दुष्ट- कर्म जो भी करे, यों पायेगा नाश ।
छोड़े बिन पौरों तले, छाँह करे ज्यों वास ॥ (२०८)

தன்னைத்தான் காதல னாயின் எனைத்தொன்றும்
துன்னற்க தீவினைப் பால்.   (௨௱௯ - 209)
 

कोई अपने आपको, यदि करता है प्यार ।
करे नहीं अत्यल्प भी, अन्यों का अपचार ॥ (२०९)

அருங்கேடன் என்பது அறிக மருங்கோடித்
தீவினை செய்யான் எனின்.   (௨௱௰ - 210)
 

नाशरहित उसको समझ, जो तजकर सन्मार्ग ।
पाप-कर्म हो नहिं करे, पकड़े नहीं कुमार्ग ॥ (२१०)

பு. ஆ. முத்துக்கிருஷ்ணன் (திருக்குறள் இசைமலர்)

Raga: பூர்விகல்யாணி  |  Tala: ஆதி
பல்லவி:
தீயைவிடக் கொடிதாம் தீவினை தன்னை நீ
திரும்பியும் பாராதே மனமே

அநுபல்லவி:
தீதான் தொட்டவரை மட்டிலுமே சுடும்
தீவினையாளரால் அவர் குலமே கெடும்

சரணம்:
மன்னும் திறக்குறள் மணிமொழி சொல்லு
மறந்தும் பிறன்கேடு சூழாதே; நில்லு
தன்னிழல் தன்னைத் தொடர்வது போல
தன்வினை தன்னையே தாக்கும் அதாலே




Popular Chapter

Popular Couplet

Repeated Word in Couplets
Most repeated word in Thirukkural
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

Repeated Word in Couplet Starting
Most common First word in the Couplets
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

Repeated Word in Couplet Ending
Most common Last word in the Couplets
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22