दूत

அன்புடைமை ஆன்ற குடிப்பிறத்தல் வேந்தவாம்
பண்புடைமை தூதுரைப்பான் பண்பு.   (௬௱௮௰௧ - 681)
 

स्नेहशीलता उच्चकुल, नृप-इच्छित आचार ।
राज-दूत में चाहिये, यह उत्तम संस्कार ॥ (६८१)

அன்பறிவு ஆராய்ந்த சொல்வன்மை தூதுரைப்பார்க்கு
இன்றி யமையாத மூன்று.   (௬௱௮௰௨ - 682)
 

प्रेम बुद्धिमानी तथा, वाक्शक्ति सविवेक ।
ये तीनों अनिवार्य हैं, राजदूत को एक ॥ (६८२)

நூலாருள் நூல்வல்லன் ஆகுதல் வேலாருள்
வென்றி வினையுரைப்பான் பண்பு.   (௬௱௮௰௩ - 683)
 

रिपु-नृप से जा जो करे, निज नृप की जय-बात ।
लक्षण उसका वह रहे, विज्ञों में विख्यात ॥ (६८३)

அறிவுரு வாராய்ந்த கல்விஇம் மூன்றன்
செறிவுடையான் செல்க வினைக்கு.   (௬௱௮௰௪ - 684)
 

दूत कार्य हित वह चले, जिसके रहें अधीन ।
शिक्षा अनुसंधानयुत, बुद्धि, रूप ये तीन ॥ (६८४)

தொகச்சொல்லித் தூவாத நீக்கி நகச்சொல்லி
நன்றி பயப்பதாந் தூது.   (௬௱௮௰௫ - 685)
 

पुरुष वचन को त्याग कर, करे समन्वित बात ।
लाभ करे प्रिय बोल कर, वही दूत है ज्ञात ॥ (६८५)

கற்றுக்கண் அஞ்சான் செலச்சொல்லிக் காலத்தால்
தக்கது அறிவதாம் தூது.   (௬௱௮௰௬ - 686)
 

नीति सीख हर, हो निडर, कर प्रभावकर बात ।
समयोचित जो जान ले, वही दूत है ज्ञात ॥ (६८६)

கடனறிந்து காலங் கருதி இடனறிந்து
எண்ணி உரைப்பான் தலை.   (௬௱௮௰௭ - 687)
 

स्थान समय कर्तव्य भी, इनका कर सुविचार ।
बात करे जो सोच कर, उत्तम दूत निहार ॥ (६८७)

தூய்மை துணைமை துணிவுடைமை இம்மூன்றின்
வாய்மை வழியுரைப்பான் பண்பு.   (௬௱௮௰௮ - 688)
 

शुद्ध आचरण संग-बल, तथा धैर्य ये तीन ।
इनके ऊपर सत्यता, लक्षण दूत प्रवीण ॥ (६८८)

விடுமாற்றம் வேந்தர்க்கு உரைப்பான் வடுமாற்றம்
வாய்சேரா வன்க ணவன்.   (௬௱௮௰௯ - 689)
 

नृप को जो संदेशवह, यों हो वह गुण-सिद्ध ।
भूल चूक भी निंद्य वच, कहे न वह दृढ़-चित्त ॥ (६८९)

இறுதி பயப்பினும் எஞ்சாது இறைவற்கு
உறுதி பயப்பதாம் தூது.   (௬௱௯௰ - 690)
 

चाहे हो प्राणान्त भी, निज नृप का गुण-गान ।
करता जो भय के बिना, दूत उसी को जान ॥ (६९०)

பு. ஆ. முத்துக்கிருஷ்ணன் (திருக்குறள் இசைமலர்)

Raga: கேதாரம்  |  Tala: ரூபகம்
பல்லவி:
தூது சொல்லத் தகுந்தவர் இவர் காண்!
துணையாய் எந்த அரசும் விரும்பும்

அநுபல்லவி:
ஓதும் கல்வி யறிவும் அழகும்
உண்மை யன்பும் பண்பும் பழகும்

சரணம்:
ஊரை வருந்தாமல் போரை நிறுத்திடும்
உலக சமாதானம் தன்னில் பொருத்திடும்
பாறையாம் பகை நெஞ்சும் மகிழ உரைத்திடும்
பலவும் தொகுத்துச் சொல்லும் இனிமை
பயனை எடுத்துக் காட்டும் தனிமை

"இறுதி பயப்பினும் எஞ்சா திறை வற்கே
உறுதி பயப்பதாம் தூதெ" னும் திருக்குறள்
கருதியே காலத்தால் காணும் இடம் பொருள்
கண்ணஞ்சாமல் நின்று காக்கும்
எண்ணும் நன்மை யாவும் சேர்க்கும்
Popular Chapter

Popular Couplet

Repeated Word in Couplets
Most repeated word in Thirukkural
 1. படும் - 42
 2. தரும் - 37
 3. இல் - 32
 4. கெடும் - 28
 5. இல்லை - 22

Repeated Word in Couplet Starting
Most common First word in the Couplets
 1. ஆற்றின் - 5
 2. இன்பம் - 5
 3. நனவினால் - 5
 4. காமம் - 4
 5. காமக் - 4

Repeated Word in Couplet Ending
Most common Last word in the Couplets
 1. படும் - 42
 2. தரும் - 37
 3. இல் - 32
 4. கெடும் - 28
 5. செயல் - 22