பலவகை வளங்களையும் அசைவற்ற நிலையையும் உடையது பெரிய மலை.
அத்தகைய மலையே சாய்ந்தால், நிலத்தி எனவே இல்லையால் உள்ள பொருள்கள் அனைத்தும் தரைமட்டமாகிவிடும்.
அதுபோல, மலைபோன்ற உயர்வும், புகழும் உடைய பெரியோர் தங்களை இகழ்ந்தவரை தண்டிக்க முற்பட்டால், உலகில் நிலை பெற்றவர் போல் உள்ள செல்வர் தம் குடும்பத்தோடு நிலைகுலைந்து அழிந்து போவார்.
("சலனமற்ற தன்மையால் உயர்ந்த மலை போன்ற பெரியோர்கள், மனம் நொந்து குறைவாக எண்ணி விட்டாலும், அவர்களுக்குத் துன்பம் செய்தவர்கள் உலகத்தில் உயர்ந்து நின்றவர்களானாலும் குலத்தோடு அழிந்து போவார்கள்" என்ற கருத்தும் பொருந்தும்)
(பெரியோர் என்பவர், அருளாளர், தவசீலர் என்பார்கள். தண்டித்தல் என்பதை சபித்தல், கோபித்தல் என்றும் கூறுவர்.)