सैन्य- साहस

கான முயலெய்த அம்பினில் யானை
பிழைத்தவேல் ஏந்தல் இனிது.   (௭௱௭௰௨ - 772) 

वन में शश पर जो लगा, धरने से वह बाण ।
गज पर चूके भाल को, धरने में है मान ॥  (७७२)


तमिल (தமிழ்)
காட்டு முயலைக் குறிதவறாமல் எய்து வீழ்த்திக் கொன்ற அம்பினைக் காட்டிலும், யானைமேல் எறிந்து குறிதவறிய வேலினைத் தாங்குதலே படைமறவருக்கு இனிதாகும் (௭௱௭௰௨)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)


காட்டில் ஓடுகின்ற முயலை நோக்கி குறிதவறாமல் எய்த அம்பை ஏந்துதலைவிட, வெட்ட வெளியில் நின்ற யானை மேல் எறிந்து தவறிய வேலை ஏந்துதல் சிறந்தது. (௭௱௭௰௨)
— மு. வரதராசன்


காட்டில் அஞ்சி ஓடும் முயலைக் கொன்ற அம்பைப் பிடித்திருப்பதை விட, எதிர்த்து வரும் யானையின் மீது பட்டும், அதை வீழ்த்தாத வேலைப் பிடித்திருப்பது நல்லது. (௭௱௭௰௨)
— சாலமன் பாப்பையா


வலிவு மிகுந்த யானைக்குக் குறிவைத்து, அந்தக் குறிதப்பினாலும்கூட அது, வலிவற்ற முயலுக்குக் குறிவைத்து அதனை வீழ்த்துவதைக் காட்டிலும் சிறப்புடையது (௭௱௭௰௨)
— மு. கருணாநிதி


ब्राह्मी (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)
𑀓𑀸𑀷 𑀫𑀼𑀬𑀮𑁂𑁆𑀬𑁆𑀢 𑀅𑀫𑁆𑀧𑀺𑀷𑀺𑀮𑁆 𑀬𑀸𑀷𑁃
𑀧𑀺𑀵𑁃𑀢𑁆𑀢𑀯𑁂𑀮𑁆 𑀏𑀦𑁆𑀢𑀮𑁆 𑀇𑀷𑀺𑀢𑀼 (𑁘𑁤𑁡𑁓)
— (தமிழி / தமிழ்ப் பிராமி)


अंग्रेज़ी (English)
Kaana Muyaleydha Ampinil Yaanai
Pizhaiththavel Endhal Inidhu
— (Transliteration)


kāṉa muyaleyta ampiṉil yāṉai
piḻaittavēl ēntal iṉitu.
— (Transliteration)


Better collect the spear that missed an elephant Than the arrow that killed a hare.

तेलुगु (తెలుగు)
చెవులపిల్లి గురికి బిక్కు బాణము కన్న
నేన్గు తప్పుకొన్న యీటె మేలు (౭౭౨)


मलयालम (മലയാളം)
ഓടുന്ന മുയലിൻ‍ നേരേ തെറ്റാതെയ്‌തിടുമമ്പിലും‍ ശ്രേഷ്‌ഠം‍ മുമ്പിൽ‍ ഗജം‍ നേരെ തെറ്റിപ്പോയിടുമമ്പുതാൻ (൭൱൭൰൨)

कन्नड़ (ಕನ್ನಡ)
ಕಾಡಿನಲ್ಲಿ ಮೊಲಕ್ಕೆ ಗುರಿತಾಗುವಂತೆ ಹೊಡೆದ ಅಂಬಿಗಿಂತ, ಆನೆಯ ಮೇಲೆ ಹೊಡೆದು ಗುರಿ ತಪ್ಪಿದ ಶೂಲವನ್ನು ಹೊದಿರುವುದೇ ಮೇಲು. (೭೭೨)

संस्कृत (संस्कृतम्)
अमोघं बाणमुत्सृज्य शशे प्राप्तो जयो वृथा ।
गजे प्रयुक्तबाणस्तु मोघोऽपि स्याज्जयावह: ॥ (७७२)


सिंहाली (සිංහල)
ඇතූට ඇන වැරදුන - වේලායුදය ගැනුමත් කැලෑ හාවට විදි - ඊය ගැනුමට වඩා වීරයි (𑇧𑇳𑇰𑇢)

चीनी (汉语)
以矛擲象縱不中, 楢榮於擲兔而中之也. (七百七十二)
程曦 (古臘箴言)


मलय (Melayu)
Lembing yang di-baling ka-arah gajah bergading, biar pun gagal, membawa kegemilangan yang lebeh chemerlang daripada anak pa- nah yang di-arahkan kapada arnab dan mengena-nya pula.
Ismail Hussein (Tirukkural)


कोरियाई (한국어)
달리는토끼를죽인화살보다움직이지않는코끼리를놓친창을잡고있는것이더기분좋다. (七百七十二)

रूसी (Русский)
Копье, брошенное отважной рукой в боевого слона, даже не попавшее в него,,риносит воину больше славу, чем стрела, метко пронзившая кролика

अरबी (العَرَبِيَّة)
نبلة تصوب إلى فيل ذى ناب ولا تصيبه أكثر مجدا وشأنا من رمح يطرح ويقذف إلى أرنب فيقتله (٧٧٢)


फ्रेंच (Français)
Il vaut mieux tenir à la main la flèche qui a manqué l'éléphant dans la plaine que celle qui a atteint le lièvre dans la forêt.

जर्मन (Deutsch)
Es ist erfreulicher, den Speer zu halten, der den Elefanten verfehlte, als den Pfeil, der den Waldhasen traf.

स्वीडिश (Svenska)
Det är bättre att hålla det spjut som fåfängt slungades mot stridselefanten än den pil som träffade skogens hare.
Yngve Frykholm (Tirukkural)


लातिनी (Latīna)
Dulcius est, jaculum gerere, quod clephantum frustra petat, quam sagittam, quae lepus ailvae feriat. (DCCLXXII)

पोलिश (Polski)
Chyba że przekładacie śmierć w walce z tytanem Nad zgniecenie niezdarnych rywali.
Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)


மெச்சத்தக்கது எது? — முல்லை பி. எல். முத்தையா (திருக்குறள் உவமைகள்)

ஒரு வேடன் காட்டிற்குச் சென்று, பயந்து பாய்ந்து ஓடும் முயல்களை அம்பு எய்து பிடித்து வருகிறான்.

மற்றொரு வேடன் பலம் பொருந்திய யானையின் மீது அம்பு எய்கிறான். ஆனால் யானையோ தப்பி ஓடிவிடுகிறது. எய்யப்பட்ட அம்பு யானையோடு போய்விடுகிறது என்றாலும், முயலை பிடித்தவனை காட்டிலும் அம்பு எய்தவனுடைய வீரமே சிறந்தது.

அதுபோல, போரில் பயந்து ஓடும் பகைவனின் படையைத் துரத்திச் சென்று பிடிக்கிறது பெரும்படை. வீரம் பொருந்திய இன்னொரு படையை எதிர்த்து நின்று தாக்கி அந்தப் படை முன்னேறுவதைத் தடுத்து நிறுத்தி விடுகிறது.

பயந்து ஓடும் படையினரை வெற்றி கொள்வதைக் காட்டிலும், வலிமையான படையின் முன்னேற்றத்தை எதிர்த்து நிற்பதே சிறப்பாகும்.


கான முயலெய்த அம்பினில் யானை பிழைத்தவேல் ஏந்தல் இனிது.
ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்

Popular Chapter

Popular Couplet

Repeated Word in Couplets
Most repeated word in Thirukkural
 1. படும் - 42
 2. தரும் - 37
 3. இல் - 32
 4. கெடும் - 28
 5. இல்லை - 22

Repeated Word in Couplet Starting
Most common First word in the Couplets
 1. ஆற்றின் - 5
 2. இன்பம் - 5
 3. நனவினால் - 5
 4. காமம் - 4
 5. காமக் - 4

Repeated Word in Couplet Ending
Most common Last word in the Couplets
 1. படும் - 42
 2. தரும் - 37
 3. இல் - 32
 4. கெடும் - 28
 5. செயல் - 22