कर्म में दृढ़ता

உருவுகண்டு எள்ளாமை வேண்டும் உருள்பெருந்தேர்க்கு
அச்சாணி அன்னார் உடைத்து.   (௬௱௬௰௭ - 667) 

तिरस्कार करना नहीं, छोटा क़द अवलोक ।
चलते भारी यान में, अक्ष-आणि सम लोग ॥  (६६७)


तमिल (தமிழ்)
உருளுகின்ற பெரிய தேருக்கு அச்சாணிபோல நின்று காப்பவரையும் உலகம் உடையது; அதனால் ஒருவரது சிறிதான உருவத்தைப் பார்த்து இகழக் கூடாது (௬௱௬௰௭)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)


உருளும் பெரிய தேர்க்கு அச்சில் இருந்து தாங்கும் சிறிய ஆணிப் போன்றவர்கள் உலகத்தில் உள்ளனர், அவர்களுடைய உருவின் சிறுமையைக்கண்டு இகழக் கூடாது. (௬௱௬௰௭)
— மு. வரதராசன்


அச்சாணி சிறியது எனினும் உருளுகின்ற பெரிய தேருக்கு அது உதவுவது போல, மன உறுதி உடையவர்கள் வடிவத்தால் சிறியர் எனினும் செயலால் பெரியர் என்பதால் அவரை இகழக்கூடாது. (௬௱௬௰௭)
— சாலமன் பாப்பையா


உருவத்தால் சிறியவர்கள் என்பதற்காக யாரையும் கேலி செய்து அலட்சியப்படுத்தக் கூடாது பெரிய தேர் ஓடுவதற்குக் காரணமான அச்சாணி உருவத்தால் சிறியதுதான் என்பதை உணர வேண்டும் (௬௱௬௰௭)
— மு. கருணாநிதி


ब्राह्मी (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)
𑀉𑀭𑀼𑀯𑀼𑀓𑀡𑁆𑀝𑀼 𑀏𑁆𑀴𑁆𑀴𑀸𑀫𑁃 𑀯𑁂𑀡𑁆𑀝𑀼𑀫𑁆 𑀉𑀭𑀼𑀴𑁆𑀧𑁂𑁆𑀭𑀼𑀦𑁆𑀢𑁂𑀭𑁆𑀓𑁆𑀓𑀼
𑀅𑀘𑁆𑀘𑀸𑀡𑀺 𑀅𑀷𑁆𑀷𑀸𑀭𑁆 𑀉𑀝𑁃𑀢𑁆𑀢𑀼 (𑁗𑁤𑁠𑁘)
— (தமிழி / தமிழ்ப் பிராமி)


अंग्रेज़ी (English)
Uruvukantu Ellaamai Ventum Urulperundherkku
Achchaani Annaar Utaiththu
— (Transliteration)


uruvukaṇṭu eḷḷāmai vēṇṭum uruḷperuntērkku
accāṇi aṉṉār uṭaittu.
— (Transliteration)


Despise not by looks! Even linchpins hold in place The wheels of mighty chariots!

तेलुगु (తెలుగు)
ఆకృతిగని యెంచ కల్పుగా నొకనిని
తేరును కడచీలె తిరుగబెట్టు. (౬౬౭)


मलयालम (മലയാളം)
ലളിതവേഷത്താലാരും ചെറുതെന്ന് നിനക്കൊലാ പെരുതാം രഥചക്രത്തിലച്ചാണി ലഘുവല്ലയോ? (൬൱൬൰൭)

कन्नड़ (ಕನ್ನಡ)
ಉರುಳುವ ದೊಡ್ಡ ತೇರಿಗೆ, ಚಕ್ರದ ಅಚ್ಚಿನಲ್ಲಿರುವ (ಪುಟ್ಟ) ಕೀಲಿಮೊಳೆಯಂತೆ, ಲೋಕದಲ್ಲಿ (ಕೆಲವರು) ಇರುವರು; ಅವರ ಸಾಮಾನ್ಯ ಆಕಾರವನ್ನು ಕಂಡು ನಾವು ಕೀಳೆಣಿಸಬಾರದು. (೬೬೭)

संस्कृत (संस्कृतम्)
महारथाक्षक्षुद्राऽऽणिसमा: सन्तो दृढक्रिया: ।
महत्वे नाकृतिर्हेतु: दार्ढ्यं स्यात्तत्र कारणम् ॥ (६६७)


सिंहाली (සිංහල)
රියේ පෙරළෙන සුලු - රිය සකැ කඩ ඇණය වැනි මිනිසුන් ඇත ලොවෙහි - හැඩය දුටු මුත් නිගා නො කරන් (𑇦𑇳𑇯𑇧)

चीनी (汉语)
莫以貌不舉而輕其人; 輪軸之小釘, 猶使車運轉也. (六百六十七)
程曦 (古臘箴言)


मलय (Melayu)
Usah-lah di-hina orang kerana rupa-nya: kerana ada orang yang sa- kcchil pasak roda rata yang menderam di-atas dunia gagah.
Ismail Hussein (Tirukkural)


कोरियाई (한국어)
사람의외모는중요하지않다.그사람 자체가구르는전차의비녀장만큼중요할수있다. (六百六十七)

रूसी (Русский)
Не смотри с презрением на человека тщедушного, ибо есть люди с виду неприметные,,о подобные чеке в огромной колеснице, которая мчится с большой скоростью

अरबी (العَرَبِيَّة)
لا تحتـقـر احدا بسبب نحــو لــه فى جسمه ألا ترى أن قضيب الحديد النحيل فى العجلة يجعلها تدور عليه بالضبط والمتانة (٦٦٧)


फ्रेंच (Français)
(Le monde) considère ceux qui ont la fermeté dans l'action comme la clavette d'essieu d'un puissant char qui roule: il ne faut donc mépriser personne, à cause de son aspect.

जर्मन (Deutsch)
Niemand soll wegen seiner Erscheinung verachtet werden - oft sind solche wie der Radzipfen eines großen rollenden Wagens.

स्वीडिश (Svenska)
I världen finns män som fungerar likt den stora rullande vagnens hjulaxel. Ej må man förakta dem för deras ringa yttre gestalts skull.
Yngve Frykholm (Tirukkural)


लातिनी (Latīna)
Noli speciem spcctans viii pendere, Iuveniuntur, qui similes siut clavo in axi magui currus, qui rotis volvitur. (DCLXVII)

पोलिश (Polski)
Nie pogardzaj tym wszystkim, co drobne i małe, Mały gwóźdź trzyma koła rydwana.
Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)


தேரும் அச்சாணியும் — முல்லை பி. எல். முத்தையா (திருக்குறள் உவமைகள்)

உருவத்தில் மிகச் சிறியது அச்சாணி, ஆனால் உறுதி வாய்ந்தது.

உருண்டு ஓடக் கூடிய பெரிய தேருக்கு, அந்த அச்சாணி மிகவும் ஆதாரமானது. அது இல்லையானால், தேர் ஓடாது.

காண்பவர்கள் தேரைக் கண்டு மகிழ்வார்கள். ஆனால் அந்த அச்சாணியின் முக்கியத்துவத்தை அறிய மாட்டார்கள்.

அதுபோல, ஒருவர் உருவத்தில் சிறியவராய், எளியவராய் இருக்கிறாரே என்று நினைத்து அவரை இகழக்கூடாது.

அவருடைய அறிவையும், புத்திக் கூர்மையையும், திறமையையும் மதித்து போற்ற வேண்டும்.

(அச்சாணியைக் கடையாணி என்றும் கூறுவார்கள்).


உருவுகண்டு எள்ளாமை வேண்டும் உருள்பெருந்தேர்க்கு அச்சாணி அன்னார் உடைத்து.
ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்

Popular Chapter

Popular Couplet

Repeated Word in Couplets
Most repeated word in Thirukkural
 1. படும் - 42
 2. தரும் - 37
 3. இல் - 32
 4. கெடும் - 28
 5. இல்லை - 22

Repeated Word in Couplet Starting
Most common First word in the Couplets
 1. ஆற்றின் - 5
 2. இன்பம் - 5
 3. நனவினால் - 5
 4. காமம் - 4
 5. காமக் - 4

Repeated Word in Couplet Ending
Most common Last word in the Couplets
 1. படும் - 42
 2. தரும் - 37
 3. இல் - 32
 4. கெடும் - 28
 5. செயல் - 22