ஒரு வண்டியில் அளவுக்குமீறி சாமான்கள் ஏற்றினால், என்ன ஆகும்? அச்சு முறிந்து வண்டி நொறுங்கி சேதமடையும்.
மயிலின் தொகையானது மிக மென்மையானது தான் என்றாலும், அதைக்கூட அளவுக்கு அதிகமாக வண்டியில் ஏற்றி வைத்தால், அந்த பாரத்தை தாங்க மாட்டாது அச்சு முறிந்துவிடும்.
அதுபோல, ஒரு பொருளின் தன்மையை காட்டிலும், அதனுடைய வலிமையை அறிந்து கொள்ள வேண்டும். உதாரணமாக, ஒரு எதிரி எளியவன், பலவீனன் என்று அலட்சியமாக எண்ணிவிடக் கூடாது. அவனைப் போன்ற பலர் ஒன்றுபட்டால், அவர்கள் மிகுந்த பலசாலிகளாக ஆகிவிடுவார்கள். ஆகவே, பலரையும் பகைவர்கள் ஆக்கிக் கொண்டு வாழ முடியாது.