மிக அவசரமான நேரத்தில்- தக்க சமயத்தில், மனம் உவந்து ஒருவர் உதவி செய்தால், அது எப்படிப் பட்டது?
அந்த உதவி செய்தாகக் கூட இருக்கலாம். ஆனால், உதவியின் பயனை நோக்கினால் இந்த உலகத்தை விட பெரிதாகும்.
உதவி என்பது பல வகை; பணம், பொருள், உணவு, உடை, உடல் உழைப்பு இவற்றில் எதுவாக இருந்தாலும் சரி.
எந்த மாதிரி நேரத்தில் உதவி கிடைத்தது; அதனால் எத்தனை கஷ்டம் நீங்கியது; என்ன நன்மை கிடைத்தது; என்பதைப் பரந்த மனப்பான்மையோடு, எண்ணிப் பார்த்து உதவி செய்தவரை போற்ற வேண்டும்.