Raga: தேவமனோகரி | Tala: ரூபகம் பல்லவி:மண் பொம்மை இதனைப் பாரம்மா - பெயர்
வள்ளுவர்தான் கூறினாரம்மா
அநுபல்லவி:மண் பொம்மை இதுவும் ஒரு
மனிதனின் பொம்மை
மதி பெறவே கடையில் வைத்தக்
கல்லாமைப் பொம்மை
சரணம்:விலங்கொடு மக்கள் அனையர் என்று விளக்கமும் கூறும்
விளையாத களர் நிலமாய் விழிகளை மூடும்
அலங்காரம் செய்திட்டாலும் அரங்கின்றி ஆடும்
அறிவுடையார் வரவு கண்டால் அப்பாலே ஓடும்
கல்லாதவன் ஒட்பம் சொல்லிக் கழிய நல்ல தாயினும்
கொள்ளார் அறிவுள்ளார் அது எது கொடுத்த போதிலும்
சொல்லாமல் இருக்கப் பெற்றால் கற்றவர் மின்னே
கல்லாரும் நனி நல்லர் கருத்துரை என்னே!