களர் நிலமானது பார்வைக்கு நல்ல நிலத்தைப் போலவே தெரியும். ஆனால், எவ்வளவு உழுது பயிர் செய்தாலும் பயன் தராது. விதையும் அழிந்துவிடும். (களர் நிலம் என்பது சேற்று நிலம், உப்பு நிலம்.)
அதுபோல, கல்வியறிவு இல்லாதவர்கள், பெயர் அளவுக்கு உயிரோடு இருக்கிறார்கள் என்று வேண்டுமானால் சொல்லிக் கொள்ளலாமே தவிர, அவருக்கு ஒன்றுக்கும் உதவாதவர்கள். பயன்படுகிறார்களா? அதுவும் இல்லை.
அவர்கள் எங்கே இருந்தாலும் சரி. தங்களுக்காவது பயன் உண்டா? அல்லது பிறருக்கேனும் பயன்படுகிறார்களா? அதுவும் இல்லை.
கல்லாதவர் களர் நிலத்தை போன்றவரே!