Raga: சுருட்டி | Tala: ஆதி பல்லவி:கொடுங்கோன்மை வேண்டாம் ஐயா - என்றும்
குடிகளைத் தாங்கும் முறை
கற்றதே இல்லையா
அநுபல்லவி:கொடுங் கோன்மை செங் கோன்மையின்
எதிராகும் அல்லவோ
கடும்புலி வாழும் காட்டுப்
புதர் என்பதும் சொல்லவோ
சரணம்:வேலொடு நின்றன் இடு வென்றது போலும்
கோலொடு நின்றான் கொடும் இரவதனாலும்
பாலொடு மழையின்றிப் பண்ணைகள் தீயும்
நூலொடு தொழில் எல்லாம் நொந்துயிர் மாயும்
அல்லற் பட்டாற்றாது அழுத கண்ணீரன்றே
செல்வத்தைத் தேய்க்கும் படையாய் வரும் திரண்டே
அல்லவை நீக்கி மக்களாட்சியைக் காண்பீர் இன்றே
அறிவுறும் திருக்குறள் அன்பு வழியில் நின்றே