Raga: மணிரங்கு | Tala: ஆதி பல்லவி:படைக் கலமாய் விளங்கும் கூரறிவுடைமை
பண்புடன் காக்க வரும் இதன் பெருமை
அநுபல்லவி:உடைக்க முடியாது பகையுள் நுழையாது
ஒரு பெருங் கோட்டை என்றே
உறுதியாய் ஓங்கி நிற்கும்
சரணம்:மனக்குதிரைக் கறிவுக் கடிவாளம் பூட்டும்
மாபெரும் வீரனின் வல்லமை காட்டும்
தனக்கெதிர் வரும் தீமை யாவையும் ஓட்டும்
தன்மை கொண்ட மக்களின் நன்மையில் கூட்டும்
எப்பொருள் யார் யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பதே அறிவெனும் திருக்குறள்
ஒப்பிடவே எல்லாம் உடையவர் ஆக்கும்
ஊருடன் உலகுடன் உறைந்தினி தாளும்