Raga: கேதாரம் | Tala: ரூபகம் பல்லவி:தூது சொல்லத் தகுந்தவர் இவர் காண்!
துணையாய் எந்த அரசும் விரும்பும்
அநுபல்லவி:ஓதும் கல்வி யறிவும் அழகும்
உண்மை யன்பும் பண்பும் பழகும்
சரணம்:ஊரை வருந்தாமல் போரை நிறுத்திடும்
உலக சமாதானம் தன்னில் பொருத்திடும்
பாறையாம் பகை நெஞ்சும் மகிழ உரைத்திடும்
பலவும் தொகுத்துச் சொல்லும் இனிமை
பயனை எடுத்துக் காட்டும் தனிமை
"இறுதி பயப்பினும் எஞ்சா திறை வற்கே
உறுதி பயப்பதாம் தூதெ" னும் திருக்குறள்
கருதியே காலத்தால் காணும் இடம் பொருள்
கண்ணஞ்சாமல் நின்று காக்கும்
எண்ணும் நன்மை யாவும் சேர்க்கும்