Raga: நாராயணி | Tala: ஆதி பல்லவி:மெய்யுணர்வாய் மனமே
மேதினி மீதருள் மேவும் நிலைபெறவே
அநுபல்லவி:ஐயமில்லாத மெய்யறிவுறும் வாழ்வில்
பொய்யிருள் நீக்கி நாம்
பொதுநலப் பணி செய்ய
சரணம்:"எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவெனும்" திருக்குறள்
துப்புறச் சொல்லும்வழி துலங்கிட வாழ்வோம்
துன்பமில்லாத பேரின்பமே சூழ்வோம்