Raga: பேகடா | Tala: ரூபகம் பல்லவி:நினைத் தொன்று சொல்லாயோ - நெஞ்சே
நினைத் தொன்று சொல்லாயோ
அநுபல்லவி:துணை நினையன்றி யாரை நான் தேடுவேன்
துஞ்சாத நெஞ்சோடு கிளத்தலைப் பாடுவேன்
சரணம்:ஆதரவில்லாரை ஏனோ நினைக்கின்றாய்
பேதமையால் நெஞ்சே தேடித் திகைக்கின்றாய்
காதலை விடு ஒன்றா நாணத்தை விட்டிடு
கருதும் இவ்விரண்டையும் நான் தாங்க முடியாது
கலந்துணர்த்தும் விதம் காதலர் வரக் கண்டால்
காணாமற் போவாயா வீணாக நிற்பாயா
புலந்துணராய் ஏனோ பொய்க் காய்வு காய்வது
புதுவெள்ளம் போலவர் வந்திட்டால் பாய்வது