Raga: ஸ்ரீ ரஞ்சனி | Tala: ரூபகம் பல்லவி:சூதினும் வறுமை தருவதொன்றில்லை - ஒரு
சுகமும் இல்லை துன்ப எல்லை
அநுபல்லவி:தீதிதுவும் பொது மாதும் மதுவும் போல்
சிறுமை பல செய்து சீரழித்திடும்
சரணம்:பகடை பன்னிரன்டு பாய்ச்சிகை உருண்டு
பாயும் தாயம் சீட்டாடுவார்
பண்பும் அற்றிட நண்பும் கெட்டிட
பணயம் வைத்திடக் கூடுவார்
மிகவும் ஒன்றெய்தி நூறிழப் பினும்
மீளும் நல்வழி காண்பரோ
மீண்டும் மீண்டுமே பொருளிழப்பார்
தூண்டில் மீன்களாய்ப் பரதவிப்பார்
கவறும் கழகமும் கையும் தருக்கி
இவறியார் இல்லாகியார்
கல்வி உணவுடைச் செல்வம் புகழ் நிறை
கருதும் ஐந்துமே அடைந்திடார்
அவல நிலையிலோர் கவளமாகிலும்
அருந்தியே பசி ஆறிடார்
ஆதலால் இந்தச் சூதின்மேல் வைத்த
ஆசையற விடுவீர்
குறளைத் தொடுவீர்
அருளைப் பெறுவீர்